ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

30 வயதுகூட நிரம்பவில்லை, மரணமும்! மரணத்தைத் தொட்டு வந்த கிரிக்கெட் வீரர்களும்

வாழ்க்கையில் எது வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இந்த செய்தியில் பார்க்கக்கூடிய 5 கிரிக்கெட் வீரர்கள். இவர்கள் சிறுவயதில் தம் கேரியரை தொலைத்துவிட்டு நிற்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த ஐந்து பேரும் திறமைகள் பல இருந்தும் ஒரு சில காரணங்களால் தம் கேரியரையே மாற்றும் அளவிற்கு சோகங்களை சந்தித்துள்ளனர்.

நேரி காண்ட்ராக்டர்: (28 வயது) இந்தியாவைச் சேர்ந்த இடதுகை பேட்ஸ்மேனான இவர் 26 வயதில் இந்திய அணிக்காக கேப்டன் பொறுப்பை ஏற்றவர். காண்ட்ராக்டர் எப்பொழுதுமே இங்கிலாந்து அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடக் கூடியவர். ஒருமுறை மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் சார்லஸ் கிரைஃபித், என்னும் பந்துவீச்சாளர் வீசிய பவுன்சர் பந்து இவரது மண்டை ஓட்டை பதம் பார்த்தது. அதனோடு இவருடைய கிரிக்கெட் கேரியரும் முடிவுக்கு வந்தது.

Nari-Cinemapettai.jpg
Nari-Cinemapettai.jpg

கிரைக் கயிஸ்வெட்டர்: (27 வயது) ஒரு விபத்து இவரை 27வயதில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுக்கு தள்ளியது. 2010ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி 20 ஓவர் உலகக்கோப்பை வெல்வதற்கு முக்கிய காரணம் கயிஸ்வெட்டர். அந்தப் போட்டியில் இவர்தான் மேன் ஆப் தி மேட்ச். இங்கிலாந்து அணியின் வெற்றிகரமான இவரை ஒரு பந்து கண்ணில் தாக்கியது, அதிலிருந்து பார்வையை இழந்த இவர், கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

Kieswetter-Cinemapettai.jpg
Kieswetter-Cinemapettai.jpg

பில் ஹக்ஸ்: (25 வயது) மேத்யூ ஹெய்டனுக்கு பதில் அணியில் சேர்க்கப்பட்டவர்
பில் ஹக்ஸ். முதல்தர கிரிக்கெட்டில் 9000 ரன்களுக்கு மேல் குவித்தவர். இவர் ஒருமுறை உள்ளூர் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, சியான் அபாட் வீசிய பந்து இவருடைய பின்னங்கழுத்தை தாக்கியது. மைதானத்திலேயே மயங்கி விழுந்த இவர் கோமா நிலைக்கு சென்றார். அதன் பின்னர் மருத்துவமனையில் இரு நாட்கள் கழித்து உயிரிழந்தார்.

Phil-Cinemapettai.jpg
Phil-Cinemapettai.jpg

முகமது ஆசிப்: (27 வயது) தனது அசுரத்தனமான பந்துவீச்சால் எதிரணி பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் ஆசிப் பாகிஸ்தான் அணிக்காக 38 ஒருநாள் போட்டிகளில் விளையாடி46 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இது மட்டுமின்றி 23 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 106 விக்கெட்டுகளையும் சரித்துள்ளார். இவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு போட்டியில் நோ பால் வீசியது சர்ச்சைக்குள்ளாகி, பின்னர் இவர் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார் என 7 வருடம் தடை செய்யப்பட்டார். அதன்பின் இன்றுவரை அவர் விளையாடவில்லை.

Mohammed-Cinemapettai.jpg
Mohammed-Cinemapettai.jpg

ஜேம்ஸ் டெய்லர்: (26 வயது) ஒருநாள் போட்டிகளில் 42 சராசரியாக வைத்துள்ள இவர் இங்கிலாந்து அணிக்காக நீண்ட காலம் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்து ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். இவருக்கு இதயத்தில் கோளாறு என அறியப்பட்டு அதன் பின் விளையாடினால் உயிருக்கு ஆபத்து என மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது. இதனால் 26 வயதில் இவர் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார்.

James-Cinemapettai.jpg
James-Cinemapettai.jpg

Trending News