ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

வெறும் 10 பந்துகளில் போட்டியை மாற்றி “மேன் ஆப் தி மேட்ச்”.. அவார்டை தட்டி தூக்கிய 3 கிரிக்கெட் வீரர்கள்

கிரிக்கெட் போட்டியில் “மேன் ஆப் தி மேட்ச்” அவார்ட் என்பது வெற்றி பெற்ற டீமில் உள்ள சிறந்த வீரருக்கு கொடுக்கப்படும். பெரும்பாலும் இந்த அவார்டை அதிக ரன்கள், அதிக விக்கெட்டுகளை எடுத்து சிறப்பாக செயல்பட்ட வீரர்கள் பெறுவார்கள்.

ஆனால் வெறும் பத்து பந்துகளை மட்டுமே சந்தித்து அந்த அவார்டை மூன்று கிரிக்கெட் வீரர்கள் பெற்றுள்ளனர். இப்படிப்பட்ட நிகழ்வுகள் எப்போதாவது தான் கிரிக்கெட் விளையாட்டில் நடைபெறும்.

தினேஷ் கார்த்திக்: நிதாஸ் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான ஒரு போட்டியில் இந்திய அணி தோற்று விடும் என அனைவரும் மைதானத்தை விட்டு வெளியேறும் சமயம் அது. 15 பந்துகளில் இந்திய அணிக்கு 35 ரன்கள் தேவைப்பட்ட சமயத்தில் களத்தில் இறங்கினார் தினேஷ் கார்த்திக், எட்டு பந்துகளை சந்தித்த அவர் 3 சிக்சர்கள் 2 பவுண்டரிகளுடன் 29 ரன்கள் குவித்து இந்திய அணியை அதிர்ச்சி வெற்றி பெறச் செய்தார். கோப்பையை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் “மேன் ஆப் தி மேட்ச்” அவார்டை தட்டிச் சென்றார்.

Dk-Cinemapettai.jpg
Dk-Cinemapettai.jpg

மொயின் அலி: 2020 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒரு போட்டியில் 10 பந்துகளை சந்தித்த மொயின் அலி 39 ரன்களை குவித்தார். அதே போட்டியில் மூன்று ஓவர்கள் வீசி 36 ரன்களும் கொடுத்தார். இவர் உதவியால் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது ஆட்டநாயகன் விருதையும் பெற்றார்.

Moen-Cinemapettai.jpg
Moen-Cinemapettai.jpg

ஜோஸ் பட்லர்: இங்கிலாந்து அணியின் ஒரு அற்புதமான கீப்பர். எந்தப் போட்டியாக இருந்தாலும் தன் அதிரடி ஆட்டத்தின் மூலம் போட்டியை இங்கிலாந்துக்கு சாதகமாக மாற்றக் கூடியவர். 2012ஆம் ஆண்டு ஒரு போட்டியில் வெறும் 10 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 32 ரன்களை குவித்து மேன் “ஆப் தி மேட்ச் அவார்டை” வென்றார். இவரது அதிரடி ஆட்டத்தின் மூலம் கடைசி 11 ஓவர்களில் இங்கிலாந்து அணி 118 ரன்களை குவித்தது.

Jos-Cinemapettai.jpg
Jos-Cinemapettai.jpg

Trending News