பொதுவாக வீரர்கள் அனைவரும் தாம் விளையாடும் கடைசி போட்டியில் மறக்க முடியாத அளவில் ஏதாவது ஒரு பங்களிப்பை கொடுக்க விரும்புவார்கள். அப்படி விளையாடும் போட்டிகள் பெரும்பாலும் துரதிஷ்டவசமாகவே முடியும். ஆனால் ஒரு சிலருக்கோ அது ஒரு மறக்கமுடியாத போட்டியாகவும் அமையும். அப்படியாப்பட்ட போட்டியில் தேவையில்லாமல்ரன் அவுட் மூலம் வெளியேறிய வீரர்கள்;
பிரைன் லாரா: 2007 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பைத் தொடரில் சூப்பர் 8 போட்டிகளுடன் வெளியேறியது மேற்கிந்தியத் தீவுகள் அணி. அந்தப் போட்டியே நட்சத்திர கிரிக்கெட் வீரரான பிரையன் லாராவிற்கு கடைசி போட்டியாக அமைந்தது.18 ரன்கள் எடுத்திருந்தபோது கெவின் பீட்டர்சனின் அபார பில்டிங் மூலம் லாரா ரன் அவுட் செய்யப்பட்டார்.
ஜாவித் மியாண்டட்: பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களின் இன்று வரை பலரது மனதில் நிற்கும் வீரர் மியாண்டட். பாகிஸ்தான் அணிக்காக பல்வேறு போட்டிகளை தனியாளாக நின்று வென்று கொடுத்தவர். இவர் இந்தியாவுக்கு எதிராக 1996ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் 38 ரன்களுடன் வெளியேறினார். துரதிஷ்டமாக அந்த போட்டியில் இவர் ரன் அவுட் மூலமாக வெளியேற நேரிட்டது.
மகேந்திர சிங் தோனி: இந்திய அணிக்காக நீண்டகாலம் கேப்டனாக செயல்பட்டவர். இவருடைய தலைமையில் இந்திய அணி எல்லா விதமான போட்டிகளிலும் சிறந்த அணியாக விளங்கியது. 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்து அணிக்கு எதிராக தத்தளித்துக் கொண்டிருக்கும் போது கடைசி வரை களத்தில் நின்று இந்திய அணிக்காக போராடினார். அந்த போட்டியில் வெற்றியின் விளிம்பில் இருந்த இந்திய அணி தோனியின் எதிர்பாராத ஒன்னு ஓட்டினால் தொடரில் இருந்து வெளியேற நேரிட்டது. இந்த போட்டியை பார்த்த இந்திய நாடே அவர் ரன் அவுட் ஆனதால் கண்ணீர் சிந்தியது.