சனிக்கிழமை, நவம்பர் 16, 2024

அதிகமுறை 300 பந்துகளுக்கு மேல் சந்தித்த 5 டெஸ்ட் வீரர்கள்.. ராகுல் டிராவிட்டுக்கே சவாலா?

ஆரம்ப காலகட்டத்தில் கிரிக்கெட் போட்டிகள் என்றால் அது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மட்டும்தான். அதன் பின்புதான் 60 ஓவர் போட்டி, 50 ஓவர் போட்டி, 20 ஓவர் போட்டி என மாற்றங்களைக் கொண்டு வந்தார்கள். டெஸ்ட் போட்டிகளில் பலம் வாய்ந்த இரு அணிகள் மோதும் போது, சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லாமல் நடைபெறும். இந்த வகை போட்டிகளுக்கு என்று பொறுமை வாய்ந்த குறிப்பிட்ட சில வீரர்கள் இருப்பார்கள். இந்தியாவைப் பொருத்தவரை ராகுல் டிராவிட், புஜாரா, விவிஎஸ் லக்ஷ்மன் போன்றோர்கள் சிறப்பாக விளையாடகூடியவர்கள். 300 பந்துகள் என்பது கிட்டத்தட்ட 50 ஓவர் அந்த வகையில் அதிகமுறை 300 பந்துகளுக்கு மேல் சந்தித்த வீரர்களை பார்க்கலாம்.

ராகுல் டிராவிட்: இந்தியாவிற்காக டெஸ்ட் போட்டிகளில் 13,288 ரண்களை குவித்துள்ளார். இந்த வகை போட்டியில் இவருடைய சாராசரி 52.31. டிராவிட் 36 சதங்களும் 53 அரை சதங்களும் அடித்துள்ளார். இவர் 6 முறை 200 ரன்களுக்கு மேல் எடுத்து சாதனை புரிந்துள்ளார். கிட்டத்தட்ட 16 டெஸ்ட் போட்டிகளில் இவர் 300 பந்துகளுக்கு மேல் சந்தித்து சாதனை படைத்துள்ளார்.

Rahul-Cinemapettai.jpg
Rahul-Cinemapettai.jpg

குமார் சங்ககாரா: இலங்கை அணியில் தலைசிறந்த விக்கெட் கீப்பராக செயல்படும் சங்ககாரா, ராகுல் டிராவிட்டை போல் 16 முறை 300 பந்துகளுக்கு மேல் சந்தித்து சாதனை படைத்துள்ளார். 1 ரன், 2 ரன்கள் என அதிகமாக ஓடி எடுக்கும் பழக்கம் உள்ளவர் சங்ககாரா.

Kumar-Cinemapettai.jpg
Kumar-Cinemapettai.jpg

ஜெப்ரி பாய்காட்: வர்ணனையாளராக கலக்கிக் கொண்டிருக்கும் ஜெப்ரி பாய்காட் , இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 8114 ரன்கள் குவித்துள்ளார். இங்கிலாந்து அணியின் தூணாக செயல்பட்ட இவர், 15 முறை 300 பந்துகளுக்கு மேல் சந்தித்து சாதனை படைத்துள்ளார்.

Boycottt-Cinemapettai.jpg
Boycottt-Cinemapettai.jpg

ஜாக் காலிஸ்: தென்ஆப்பிரிக்க அணியின் மிகப் பொறுமை வாய்ந்த வீரர் என்று இவரை கூறலாம்.166 போட்டிகளில் 13,289 ரன்களை அடித்துள்ளார் அதில் 46 சதங்களும், 58 அரை சதங்களும் அடங்கும். இவரின் சராசரி 55.37 ஆகும். இவர் 12 முறை டெஸ்ட் போட்டிகளில் 300 பந்துகளுக்கு மேல் சந்தித்துள்ளார்.

Kallis-Cinemapettai-1.jpg
Kallis-Cinemapettai-1.jpg

சச்சின் டெண்டுல்கர்: இந்திய அணியின் கிரிக்கெட் கடவுளாக பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கர்,11 முறை 300 பந்துகளுக்கு மேல் சந்தித்து அசத்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக 15921 ரன்கள் குவித்துள்ளார்.

Sachin-Cinemapettai-1.jpg
Sachin-Cinemapettai-1.jpg
- Advertisement -spot_img

Trending News