கிரிக்கெட் வரலாற்றில் நிறைய கிரிக்கெட் வீரர்கள் தங்களுடைய கேரியரை குறுகிய காலத்திலேயே முடித்துக்கொண்டு ரிட்டயர்மென்ட் வாங்கியுள்ளனர். அவர்கள் பர்சனல் காரணங்களுக்காக மட்டுமல்லாது வேறு சில, பல காரணங்களுக்காகவும் விளையாட்டை விட்டு சென்றுள்ளனர்.
பொதுவாக கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் 37 முதல் 38 வயது வரை விளையாடுபவர்களாக இருப்பார்கள். ஆனால் திடீரென சற்றும் எதிர்பாராமல் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி, குறைந்த வயதிலேயே தங்களுடைய ஓய்வு முடிவை அறிவித்த 11 அபாயகரமான வீரர்களை இதில் பார்ப்போம்,
அலிஸ்டர் குக்: டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தின் அபாயகரமான ஓபனிங் பேட்ஸ்மேன் இவர். சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் சாதனையை முறியடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இவர் திடீரென தனது 33 ஆம் வயதில் ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.
கிரேம் ஸ்மித்: தென் ஆப்பிரிக்க நாட்டின் ஓபனிங் அதிரடி பேட்ஸ்மேன் இவர். நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் போதே திடீரென ஓய்வு முறையை அறிவித்தார். இவரும் தனது 33 ஆம் வயதில் ஆட்டத்திற்கு முழுக்கு போட்டு விட்டார்.

மைக்கேல் கிளார்க்: 34 வயதில் நன்றாக விளையாடிக் கொண்டிருக்கும்போதே தனது ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சி அளித்தார் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மைக்கேல் கிளார்க்.
கெவின் பீட்டர்சன்: சேவாக் போன்று எப்பொழுதும் அதிரடி ஆட்டம் ஆடக்கூடியவர் பீட்டர்சன். இவர் தனது 34 ஆம் வயதில் ஓய்வு பெற்று வெளியேறினார்.
சுரேஷ் ரெய்னா: தொடர்ந்து அணியில் இடம் பிடிக்க முடியாமல் கஷ்டப்பட்டு வந்த சுரேஷ் ரெய்னா தனது 33 ஆம் வயதிலேயே ஓய்வுபெறப் போகிறேன் என அறிவித்துவிட்டார்.
ஏபி டிவில்லியர்ஸ்: இன்றும் ஏபி டிவில்லியர்ஸ் தென்ஆப்பிரிக்க அணியினர் திரும்ப வருமாறு அழைத்துக் கொண்டிருக்கின்றனர், அப்படி ஒரு அபாயகரமான பேட்ஸ்மேன். இவர் தனது 34ஆம் வயதில் ஓய்வு முடிவை அறிவித்தார்.

அன்றேவ் பிளின்டாப்: சர்ச்சைக்கு பெயர் போனவர் பிளின்டாப். இவர் தனது 33வது வயதில் ஓய்வு முடிவை அறிவித்து குத்துச்சண்டை விளையாட்டிற்கு தனது கவனத்தை மாற்றினார்.

முஹம்மத் அமீர்: முகமது அமீர் தனது 28வது வயதில் ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சி அளித்தார். பாகிஸ்தான் அணியினர் இவரை மீண்டும் விளையாட வருமாறு அழைத்துக் கொண்டிருக்கின்றனர்.
கிரம் சுவான்: இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் இவர். தனது 34 வயதில் ஓய்வு முடிவை அறிவித்தார்.
சேன் பாண்ட்: நியூசிலாந்து அணியின் மிகவும் ஸ்டைலிஷான பவுலர் சேன் பாண்ட். இவரும் தனது 34வது வயதில் ஓய்வு முடிவை அறிவித்து அதிர்ச்சி அளித்தார்.

ஜவகல் ஸ்ரீநாத்: இந்திய அணியில் நீண்ட காலம் வேகப்பந்து வீச்சில் கலக்கியவர் ஜவகல் ஸ்ரீநாத். இவர் தனது 33 ஆம் வயதில் ஓய்வு முடிவை அறிவித்தார்.