Anirudh: சினிமாவில் ஹீரோவுக்கு கால்ஷீட்டு கேட்கும் முன்பே அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்பது பல இளம் இயக்குனர்களின் ஆசையாக உள்ளது. தற்போது அனிருத் கைசவம் உள்ள படங்களின் விவகாரம் வெளியாகியுள்ளது.
அதன்படி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ‘ஜெயிலர் 2’ படத்திற்கும், விஜய், ஹெச். வினோத் கூட்டணியில் உருவாகவுள்ள ‘விஜய்69’ படத்திற்கும், அடுத்து, விஜய் தேவரகொண்டா நடிப்பில் ‘VD12’ படத்திற்கும் இசையமைக்கவுள்ளார். இதையடுத்து, அட்லீ, சல்மான்கான், கமல்ஹாசன் இணைந்துள்ள புதிய பிரமாண்ட படத்திற்கும் அனிருத் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது.
அதேபோல், நடிகர் நானி, ஸ்ரீகாந்த் ஓடெலாவுடன் இணைந்து இயக்கும் அடுத்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல் வெளியாகிறது.
தற்போது ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ‘தேவரா’ படத்திற்கு அனிருத்தின் இசை பக்கபலமாக இருந்த நிலையில், இப்படத்தின் 2 ஆம் பாகத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளார். ‘இந்தியன் 2-‘ படத்தில் ஷங்கருடன் முதன் முறையாக இணைந்த அனிருத், ‘இந்தியன்-3’ படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார்.லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.
மேலும், ‘ஜெர்சி’ படத்திற்குப் பின், இயக்குனர் கெளதம் தின்னனுரியின் மேஜிக் – டீன் டிராமாவுக்கு இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இவரது இசையமைப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘வேட்டையன்’, அஜித்தின் ‘விடாமுயற்சி’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து ரிலீஸாக வரிசைகட்டி நிற்கிறது.
அனிருத் ஒரு படத்திற்கு இசையமைக்க ரூ.10 கோடி சம்பளம் பெறுவதாக கூறப்படும் நிலையில், அவர் ஏ.ஆர்.ரஹ்மானின் சம்பளத்தை (ரூ.8 கோடி) காட்டிலும் அதிகம் பெறுவதாக கூறப்படுகிறது. அதேசமயம் பல பின்னணிப் பாடகர்களுக்கு அவர் வாய்ப்பே தராமல் தானே பாடிக் கொள்வதாகவும் அவர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.