சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

எவ்வளவு பெரிய ஹீரோவா இருந்தா எனக்கென்ன.. ஓவர் தலைக்கனத்தில் ஆடும் க்ரஷ் நடிகை

க்ரஷ் நடிகைக்கு இப்போது மவுசு எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. ஏற்கனவே அம்மணியின் அலப்பறை கொஞ்சம் ஓவர் டோஸ் ஆக தான் இருக்கும். அதில் சமீபத்தில் வெளியான படமும் சக்கை போடு போட்டு கலெக்ஷனையும் வாரி குவித்துள்ளது.

அதனாலேயே நடிகை இப்போது தன்னுடைய சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்தி விட்டாராம். அது மட்டுமல்லாமல் தன்னை தேடி வரும் வாய்ப்புகளையும் உடனே ஏற்காமல் ஏகப்பட்ட கண்டிஷனை போட்டு வருவதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்து உள்ளது.

நடிகைக்கு போட்டியாக இருந்த அம்மணியும் தற்போது வாய்ப்பு கிடைக்காமல் நொந்து போயிருக்கிறார். அதை சாதகமாக்கி கொண்ட நடிகை அக்கட தேசத்தில் அடுத்தடுத்து வாய்ப்புகளை ஓகே செய்து வருகிறாராம்.

Also read: ஆண் நண்பருடன் பார்ட்டி பண்ணிய குத்துவிளக்கு.. கண்ணு மண்ணு தெரியாமல் குடித்துவிட்டு செய்த அலப்பறை

ஆனால் அம்மணி கேட்கும் சம்பளத்தை கொடுத்தால் தான் கால்ஷீட் கிடைக்கும். இல்லையென்றால் எவ்வளவு பெரிய ஹீரோவாக இருந்தாலும் நோ தான். அப்படித்தான் வெளிச்ச நடிகரின் படத்தில் நடிக்க நடிகைக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

ஆனால் நடிகையோ சம்பளமாக நான்கு விரல்களை உயர்த்தி காட்டி இருக்கிறார். இது கம்பெனிக்கு கட்டுபடியாக காரணத்தால் தற்போது வேறு நடிகையை தயாரிப்பு தரப்பு அணுக முடிவு செய்திருக்கிறதாம். அந்த ஹீரோவுடன் நடித்து விட மாட்டோமா என பலரும் ஏங்கும் நிலையில் நடிகை இப்படி தலைக்கனத்துடன் நடந்து கொண்டது தற்போது விமர்சனம் ஆகியுள்ளது.

Also read: திருமணமாகி ரிலேஷன்ஷிப்பில் இருந்த நடிகை.. கணவனுக்கு தெரிந்ததால் முற்றிய சண்டை

Trending News