புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

50 வயதிலும் காதல் குறையாமல் இருக்கும் மன்மதன்.. மகா சங்கமத்தில் கஞ்சியாக போகும் கோபி

விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி சீரியலின் மஹா சங்கம் இந்த வாரம் நிகழ்வதால் கூடுதல் விறுவிறுப்பு ஏற்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்ததுபோல் நடக்கிறது. 50 வயதில் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கல்லூரி காதலி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கோபி, தனக்கு அவார்டு தருவதாக ராதிகாவை கொடைக்கானலுக்கு ஹனிமூன் அழைத்து வருகிறார்.

அதே சமயம் கோபி செய்த துரோகத்தை தாங்க முடியாமல் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்து இருப்பதால், அவர்களது மனதை மாற்ற வேண்டும் என்பதற்காக எழில் கொடைக்கானலுக்கு சுற்றுலாவிற்காக குடும்பத்தையே அழைத்து வந்திருக்கிறார்.

Also Read: பாண்டியன் ஸ்டோர்ஸ் விட்டு விலகும் முக்கிய நடிகை.. டி ஆர் பி-க்கு வச்சாங்க ஆப்பு

மேலும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருக்கும் தனம்-மூர்த்தி மற்றும் புதிதாக கல்யாணம் ஆன கண்ணன்-ஐஸ்வர்யா நான்கு பேரும் கொடைக்கானலுக்கு வந்திருக்கின்றனர். பாக்யாவிற்கு ஏற்கனவே பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் உறவு முறை என்பதால் கொடைக்கானலில் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கின்றனர்.

இவர்கள் அனைவரும் தங்கிய அதே இடத்தில் தான் கோபியும் ராதிகாவுடன் தங்கியிருக்கிறார். அங்கு ராதிகா தன்னுடைய மகளுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசுவதிலேயே அதிக நேரத்தை செலவிடுவதால், 50 வயதில் காதல் குறையாத கோபி, ராதிகாவுடன் ரொமன்ஸ் செய்ய துடிக்கிறார்.

Also Read: இதுவரை பிக்பாஸ் டைட்டிலை வென்ற 5 பிரபலங்கள்.. இப்ப என்ன செய்றாங்க தெரியுமா?

அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாய் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் இருக்கும் கண்ணன் மூலம் கோபி கொடைக்கானலில்தான் ராதிகாவிடம் இருக்கிறார் என்ற செய்தி அனைவருக்கும் தெரியப் போகிறது.

இதன்பிறகு மகா சங்கமத்தில் கோபியை குடும்பமே சேர்ந்து கஞ்சியாக்கப் போகின்றனர். எனவே இனி தான் மகா சங்கமம் சூடுபிடிக்க போவதால் அதைப் பார்ப்பதற்கு சின்னத்திரை ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Also Read: தீபாவளிக்கு ஒளிபரப்பாகும் 5 படங்கள்.. சூப்பர் ஸ்டார் படம் இல்லாத ஒரே வருத்தம் தான்

Trending News