திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

உங்க பக்கம் தல வெச்சி படுக்க மாட்டேன்.. ரிலீசுக்கு முன்பே வசூலான கஸ்டடி படத்தின் கலெக்சன்

வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் நாளை ரிலீஸ் ஆகும் திரைப்படம் தான் கஸ்டடி. இந்த படத்தின் மூலம் தெலுங்கு முன்னணி நடிகர் நாக சைதன்யா தமிழுக்கு அறிமுகமானார். இதில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் அரவிந்த்சாமி, சரத்குமார், பிரியாமணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

கடந்த சில நாட்களாகவே இந்த படத்திற்கான ப்ரமோஷன் பணிகள் பல முக்கிய நகரங்களில் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாளை தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் கஸ்டடி படத்தின் ப்ரீ புக்கிங் கலெக்சன் குறித்த விபரம் தற்போது வெளியாகி படக்குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Also Read: கதை கூட முக்கியமில்லை தம்பி தான் முக்கியம்.. பிரேம்ஜிக்குனு தனி கேரக்டர் வைத்த வெங்கட் பிரபுவின் 6 படங்கள்

ஏனெனில் தமிழில் நாக சைதன்யாவிற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என நினைத்த நிலையில், அதற்கு மாறாக நடந்திருக்கிறது. ஏனென்றால் கஸ்டடி படத்தின் தியேட்டர் உரிமை தெலுங்கில் 18 கோடி அளவிற்கு நடந்துள்ளது. அதைவிட ஐந்து மடங்கு குறைவாக தமிழில் 3 கோடி தான் வசூல் ஆகி உள்ளது. இதைவிட கர்நாடகாவில் 1 கோடியும், வெளிநாடுகளில் 3 கோடிக்கும் தான் கஸ்டடி படம் விற்கப்பட்டுள்ளது.

மொத்தமாகவே கஸ்டடி படம் தற்போது வரை 25 கோடி மட்டுமே வியாபாரம் பார்த்துள்ளது. அதிலும் தெலுங்கை காட்டிலும் தமிழில் மிகக் குறைவாக கஸ்டடி வசூல் செய்திருப்பது படக்குழுவின் நம்பிக்கையை உடைத்து விட்டது. மேலும் தமிழ் ரசிகர்களை பொறுத்தவரை நாக சைதன்யாவை சமந்தாவின் முன்னாள் கணவர் என்ற அளவுக்கு தான் தெரியும்.

Also Read: போட்ட காசை எடுப்போமான்னு தெரியல இதுல அடுத்த பார்ட் வேறயா.? இருக்கிறதை விட்டு பறக்கிறதுக்கு ஆசைப்படும் வெங்கட் பிரபு

அப்படி இருக்கையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவருக்கும் விவாகரத்து ஆனதும், தற்போது உடல்நல குறைவுடன் சமந்தா இருப்பதும் தான் தமிழில் அவருக்கு வரவேற்பு கிடைக்காமல் போனதோ என்றும் தோன்றுகிறது. அது மட்டுமல்ல ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கஸ்டடி படம் வெற்றி பெற்றால் தொடர்ந்து தமிழில் நடிப்பேன் என நாக சைதன்யா உறுதியுடன் இருந்தார்.

ஆனால் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ப்ரீ புக்கிங்கில் காலை வாரி விட்ட கோலிவுட் பக்கம் இனி தல வெச்சி கூட படுக்க மாட்டேன் என்ற முடிவிற்கு நாக சைதன்யா வந்துவிட்டார். இருப்பினும் வெங்கட் பிரபு இன்னும் நம்பிக்கையுடன் தான் இருக்கிறார். ரிலீசுக்கு பிறகு அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்றும் நம்புகிறார்.

Also Read: சமந்தாவை பற்றி பேசி உருகிய நாக சைதன்யா.. விவாகரத்தின் உண்மை காரணம் இதுதானாம்!

Trending News