திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

லாஜிக்கே இல்லாமல் உப்புமா கிண்டிய வெங்கட் பிரபு.. ப்ளூ சட்டையிடம் சிக்கி சின்னா பின்னமான கஸ்டடி

கஸ்டடி திரைப்படத்தின் மூலம் வெங்கட் பிரபு தெலுங்கு திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். நாக சைத்தன்யா, கீர்த்தி செட்டி, பிரியாமணி, அரவிந்த்சாமி போன்ற பலர் நடித்திருக்கும் இப்படம் நேற்று வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு இப்படத்திற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.

அதைத்தொடர்ந்து இப்போது படம் பற்றிய நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதிலும் வெங்கட் பிரபு தேவையில்லாமல் தெலுங்கு பக்கம் சென்று மூக்குடைப்பட்டிருக்கிறார் என்றும் கூறி வருகின்றனர். இந்நிலையில் ப்ளூ சட்டை மாறனும் தன் பங்குக்கு அவரை வச்சு செய்திருக்கிறார்.

Also read: எடுபடாத வெங்கட் பிரபுவின் கஸ்டடி.. அதிர்ச்சியை கிளப்பிய முதல் நாள் வசூல்

கஸ்டடி பற்றிய தன்னுடைய விமர்சனத்தை கூறியிருக்கும் அவர் லாஜிக்கே இல்லாமல் இப்படம் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் வெங்கட் பிரபு தேவையில்லாத கேரக்டர்களை வேஸ்ட் லக்கேஜ் போன்று தூக்கி சுமந்து படத்தை உப்புமா படமாக மாற்றி இருக்கிறார் எனவும் பங்கம் செய்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் 90களில் நடக்கும் கதை போன்று இப்படம் காட்டப்பட்டிருக்கிறது. ஆனால் 90 வருடத்திற்கு முன்பு இருப்பது போல படத்தை இயக்குனர் எடுத்து வைத்திருப்பதாகவும் அவர் கலாய்த்துள்ளார். மேலும் பிளாஷ்பேக்கில் வரும் ஜீவா கேரக்டரும் தேவையில்லாத ஆணியாக இருக்கிறது.

Also read: Custody Movie Review – மாநாடு வெற்றியை தக்க வைப்பாரா வெங்கட் பிரபு.. கஸ்டடியா, கஷ்டம் D-யா? முழு விமர்சனம்

ஆக மொத்தம் கஸ்டடி மூலம் வெங்கட் பிரபு தெலுங்கு தயாரிப்பாளரை காலி செய்திருக்கிறார். தமிழ் ஹீரோவை வைத்து இங்கு படம் எடுத்திருந்தாலாவது ஓரளவுக்கு தப்பித்து இருப்பார். ஆனால் இப்போது தெலுங்கு பக்கம் எந்த தமிழ் இயக்குனரும் போக முடியாத அளவுக்கு வேட்டு வைத்திருக்கிறார் என ப்ளூ சட்டை கிழித்து தொங்கவிட்டுள்ளார்.

இவ்வாறு பல நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் இந்த கஸ்டடி வசூலிலும் பெரிய அளவு சாதனை புரியவில்லை. அந்த வகையில் 35 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் முதல் நாளில் 4 கோடி மட்டுமே வசூலித்து இருக்கிறது. இனிவரும் நாட்களிலாவது இப்படத்திற்கு ஆதரவு கிடைக்குமா என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Also read: வெங்கட் பிரபு – நாக சைத்தன்யா கூட்டணி ஒர்க் அவுட் ஆனதா.? கஸ்டடி ட்விட்டர் விமர்சனம்

Trending News