வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சிவகார்த்திகேயனுக்கு வில்லனாகும் அமுல் பேபி மூஞ்சி.. மொத்த கஜானாக்கும் ஆப்பு வைத்த 6 அடி அண்ணன்

முருகதாஸ் படத்தை முடித்துவிட்டு சுதா கொங்காராவின் புறநானூறு படம் தான் சிவகார்த்திகேயனின் அடுத்த டார்கெட். இந்த படத்தில் ஹீரோவுக்கு அடுத்து மிகவும் முக்கியமான கதாபாத்திரம் வில்லனுக்கு தானாம். அதனால் இந்த படத்தின் வில்லன் கதாபாத்திரத்திற்கு ஒரு பவர்ஃபுல்லான நடிகரை தேடி வந்தார் சுதா கொங்காரா.

ஏற்கனவே இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மலையாள நடிகர் நிவின்பாலி மற்றும் பகத் பாசிலை இந்த படத்திற்கு வில்லனாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்தது. ஆனால் எதுவும் கைகூடி வரவில்லை. இப்பொழுது இந்த முக்கியமான கதாபாத்திரத்திற்கு இரண்டு தமிழ் நடிகர்களுக்கு வலை விரித்து வருகிறார் சுதா கொங்காரா.

இந்த படத்திற்காக ஆறடி நடிகர் விஷாலை வில்லனாக தேர்ந்தெடுக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர் கேட்ட சம்பளம் தான் மொத்த யூனிட்டையும் வாயை பிளக்க செய்தது. சுமார் 20 கோடிகள் இந்த படத்தில் வில்லனாக நடிக்க கேட்டுள்ளார். மொத்த கஜானாவையும் அவருக்கு தாரவார்க்க முடியாது என ஆரம்பித்திலேயே இந்த பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது.

விஷாலை ஒதுக்கி விட்டால் வேறு யார் என யோசித்துக் கொண்டிருக்கையில், அவர் நினைவுக்கு வந்தது ஜெயம் ரவி. ஆனால் அவருக்கு குழந்தை முகம், அமுல் பேபி முகத்தோடு இப்படி ஒரு வில்லனா என எல்லோரும் யோசிப்பார்கள். ஆனால் உண்மையாகவே சிவகார்த்திகேயனை வில்லனாக பார்த்து வருகிறார் ஜெயம் ரவி.

ஜெயம் ரவி கேரியரின் உச்சத்தில் இருக்கும்போது அவரை பேட்டி எடுக்க சிவகார்த்திகேயனை சென்று இருக்கிறார். இதை ஒரு முறை மேடையிலேயே கூறினார் ஜெயம் ரவி. என்னை பேட்டி எடுக்க வந்தவர் இன்று ஆலமரம் போல் சினிமாவில் எட்டாத உயரத்தில் இருக்கிறார் என கூறி மேடையில் தன் பொறாமையை வெளிப்படுத்தினார். விளையாட்டாக கூறி இருந்தாலும் கூட ஜெயம் ரவி வில்லன் கதாபாத்திரம் ஏற்று நடிப்பாரா என்று தெரியவில்லை.

Trending News