குக் வித் கோமளி இரண்டு சீசனிலும் கோமாளியா இருந்தவர் புகழ். புகழின் புகழால் விஜய் டிவியும் புகழ்பெற்றது விஜய் டிவியின் புகழில் புகழும் புகழ் பெற்றார்.
குக் வித் கோமாளியை தொடர்ந்து புகழுக்கு வெள்ளித்திரை வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது.
அதே போல் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டவர் அஸ்வின் இவர் நாடக நடிகராவார். இப்போது சின்னத்திரையில் இணைந்த இருவரும் வெள்ளித்திரையில் இணையும் வாய்ப்பு வந்துள்ளது.
அறிமுக இயக்குனர் ஹரிஹரன் இயக்கும் இப்படத்தில் அஸ்வின் ஹீரோவாகவும் காமெடி கிங் புகழ் காமெடியனாகவும் நடிக்கிறார்கள்.
“என்ன சொல்ல போகிறாய்”என்கிற இப்படத்தின் டைட்டிலை நடிகர் ஆர்யா வெளியிட்டார். தல அஜித்தின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் என்ன சொல்ல போகிறாய் என்ற பாடலின் வரிகளை டைட்டிலாக வைத்துள்ளனர்.
