புதன்கிழமை, பிப்ரவரி 5, 2025

ஆர்.ஜெ பாலாஜி பிழைப்பை கெடுத்த புயல்.. மொத்த வசூலே இவ்வளவு தானா!

சமீபத்தில் ஆர்.ஜெ. பாலாஜி, செல்வராகவன் நடிப்பில் சொர்க்கவாசல் படம் வெளியானது. படத்துக்கு நல்ல வரவேற்பும் விமர்சனமும் கிடைத்து வருகிறது. நல்ல கதை, நல்ல திரைக்கதை, சிறந்த நடிப்பு என்று ஒரு நல்ல படத்துக்கு இருக்க வேண்டிய எல்லா விஷயமும் இந்த சொர்க்கவாசல் படத்தில் உள்ளது.

ஆனால், இவ்வளவு நல்ல படத்தை தவறான தேதியில் ரிலீஸ் செய்துவிட்டார்கள். டிசம்பர் மாதம், சென்னை எப்படி இருக்கும் என்று அனைவருக்கும் நன்றாகவே தெரியும். சென்னை மட்டுமல்ல, மற்ற மாவட்டங்களும் மழையால் பாதிக்கப்படும். இதை முன்பே கணித்த மிஸ் யு படக்குழுவினர் தெளிவாக, படத்தை இந்த மழைக்காலம் முடிந்தபிறகு தான் ரிலீஸ் என்று திட்டவட்டமாக கூறிவிட்டனர்.

மொத்த வசூலே இவ்வளவு தானா

ஆனால் சொர்க்கவாசல் படக்குழுவினர், கதை மீது உள்ள நம்பிக்கையில் ரிலீஸ் செய்துவிட்டார்கள். ஆனால் ஆர்.ஜெ.பாலாஜியின் போறாத காலம், இந்த படம் வெளியான அன்றே மழை வெளுத்து வாங்கியது. அதுமட்டுமின்றி, அடுத்த நாள் fengal புயல் பாதிப்பு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டது.

அடுத்தனாலான இன்றும் மேகமூட்டத்தோடும் மழை அவ்வப்போது பெய்த வண்ணமாக உள்ளது. இதனால் மக்கள் யாரும் படம் பார்க்க வரவில்லை. இதனால் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், படக்குழுவினர் மிகுந்த மனஉளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனர். இதுவரை சொர்க்கவாசல் படம் 2.14 கோடிகளை மட்டும் தான் வசூல் செய்துள்ளது.

படத்தின் பட்ஜெட் 25 கோடி என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தொடர்ந்து இந்த மாதம் முழுவதும் மழை பாதிப்பு இருந்துகொண்டு தான் இருக்கும். அதனால் போட்ட பணத்தையாவது எடுக்குமா என்ற சந்தேகம் வந்துள்ளது. ரிலீஸ் தேதி ஒரு படத்துக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்த நிகழ்வின் மூலம் புரிந்துகொள்ள முடிகிறது.

Trending News