தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் டி இமான். தன்னுடைய இன்னிசையால் பலரையும் கவர்ந்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு இவர் தனக்கு விவாகரத்து நடந்து விட்டதாக சோசியல் மீடியாவில் தெரிவித்தார்.
இது ரசிகர்கள் உட்பட பலருக்கும் மிகுந்த அதிர்ச்சியை கொடுத்தது. சமீபகாலமாக திரையுலகில் விவாகரத்து சம்பவங்கள் தான் அதிகமாக நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் இமான் தன்னுடைய விவாகரத்தை பல மாதங்கள் கழித்தே ஊடகங்களுக்கு தெரிவித்தார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இமான், அமலி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இப்பொழுதுதான் விவாகரத்து பற்றி வாய் திறந்தார், அதற்குள் 2ஆவது திருமணமா என்று பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. இருப்பினும் அவருக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வந்தனர்.
மேலும் இமானின் இரண்டாவது மனைவிக்கு நேத்ரா என்ற ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. இந்நிலையில் இமான் தன்னுடைய சோஷியல் மீடியாவில் நேத்ரா என்னுடைய மூன்றாவது மகளாக கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதைப்பார்த்த இமானின் முதல் மனைவி தற்போது காட்டமாக ஒரு பதிவை போட்டு இருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது டியர் இமான் உங்கள் இரண்டாவது திருமணத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள். உங்கள் வாழ்க்கையில் 12 வருடங்கள் இருந்த ஒருவரை இவ்வளவு விரைவாக உங்களால் மாற்ற முடியும் என்றால், உங்களைப் போன்ற ஒருவருக்காக நேரத்தை வீணடித்தது என்னுடைய முட்டாள்தனம், நான் அதற்காக வருத்தப்படுகிறேன்.
கடந்த இரண்டு வருடங்களாக உங்கள் சொந்தக் குழந்தைகளை நீங்கள் கவனிக்க தவறி விட்டீர்கள். இப்போது அதற்கும் ஒரு மாற்று கண்டுபிடித்து விட்டீர்களா, எது நடந்தாலும் என் குழந்தைகளை நான் பாதுகாப்பேன் என்று கிண்டலாக திருமண வாழ்த்து கூறி இருக்கிறார்.
அவரின் இந்த பதிவு தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு இமான் என்ன பதில் அளிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விவாகரத்து முடிந்த பிறகு இமான் ஜீவனாம்சம் எதுவும் தராமல் குழந்தைகளுக்கு மாதம் 5,000 ரூபாய் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. அதனால் தான் அவரின் முதல் மனைவி இப்படி ஒரு பதிவை போட்டுள்ளார்.