வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

80 வருடத்திற்கு முன் நடந்த சம்பவத்தில் நடிக்கும் தனுஷ்.. தரமாக வெளிவந்த D47 அப்டேட்

இந்த வயதிலும் பார்ப்பதற்கு ஸ்கூல் பையன் போல தோற்றமளிக்கும் நடிகர் என்றால் அது நடிகர் தனுஷ் தான். தற்போது இவர் நடிக்கும் வாத்தி படத்தில் கூட ஸ்கூல் யூனிபார்ம் போட்டு பார்க்க சின்ன பையன் போல தோற்றமளித்து ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கேரக்டரில் நடித்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.

தற்போது அவர் நடிப்பில் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் என அடுத்தடுத்து படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. அந்த வகையில் தற்போது தனுஷ் ராக்கி மற்றும் சாணிக்காயிதம் ஆகிய படங்களை இயக்கியுள்ள இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

தனுஷின் 47வது படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு தற்காலிகமாக D47 என பெயர் வைத்துள்ளனர். மேலும் இப்படம் கடந்த 1940ஆம் ஆண்டு காலகட்டங்களில் நடக்கும் கேங்ஸ்டர் படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் படம் குறித்த புதிய தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

அதன்படி D47 படத்தில் தனுஷ் இரண்டு மாறுபட்ட கேரக்டரில் நடிக்கிறாராம். இந்த இரண்டு கேரக்டருக்காக தனுஷின் கெட்டப்புகள் ஃபைனலைஸ் செய்துள்ளார்களாம். விரைவில் இந்த புகைப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது ஒரு கேங்ஸ்டர் படம் என்பதால் ரசிகர்களும் மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.

ஏற்கனவே தனுஷ் நடிப்பில் ஜகமே தந்திரம், புதுப்பேட்டை போன்ற கேங்ஸ்டர் படங்களில் நடித்திருப்பதால் இந்த படத்தில் ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தனுஷ் தனது முதல் படத்தில் இருந்து தற்போது வரை மாறுபட்ட கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இவர் நடிப்பில் ஹிந்தியில் வெளியான அட்ராங்கி ரே படம் வித்தியாசமான கதையாக இருந்தது. அந்த வகையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தற்போது தனுஷ் நடிக்கும் இந்த படமும் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News