ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

வடசென்னை போல் சம்பவத்திற்கு தயாரான தனுஷ்.. மரண மாஸாக வந்திருக்கும் D50 போஸ்டர்

D50 First Look Poster : தனுஷ் நடிப்பில் கடைசியாக கேப்டன் மில்லர் படம் வெளியானது. சிவகார்த்திகேயனின் அயலான் படத்துடன் வெளியான நிலையில் கேப்டன் மில்லர் படம் பெரிய அளவில் வசூல் பெற முடியாமல்
திணறியது. ஆனாலும் தனுஷ் தன்னுடைய அடுத்தடுத்த பட வேலைகளில் பிசியாக இருக்கிறார்.

இந்நிலையில் பவர் பாண்டி படத்தை அடுத்து தனுஷ் இயக்கி, நடிக்கும் படம் தான் டி50. சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இப்படத்தில் நித்யா மேனன், துஷாரா விஜயன், எஸ்ஜே சூர்யா, சந்தீப் கிஷன் ஆகியோர் நடிக்கின்றனர்.

மேலும் இந்த படத்தை பிரமாண்டமாக கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்நிலையில் இந்த படம் விடுமுறை நாட்களில் வெளியிடலாம் என்று திட்டம் தீட்டி இருந்த நிலையில் நாடாளுமன்றம் தேர்தல் நடக்க இருப்பதால் ஜூலை மாதம் ரிலீஸ் செய்ய இருக்கின்றனர்.

Also Read : சிவகார்த்திகேயனுக்கு போட்டியாக தனுஷ் இறக்கிவிட்ட 50-வது பட போஸ்டர்.. மொட்டை கெட்டப்பில் மிரட்டல்

மேலும் ஏஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ஏற்கனவே இப்படத்திற்கு ராயன் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பிப்ரவரி 19ஆம் தேதி ஆன இன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதேபோல் தனுஷ் ஒரு பஸ்ஸில் முன்னால் கையில் ஆயுதத்துடன் ரத்தக்கரையாக இருப்பது போல் போஸ்டர் வெளியாகி உள்ளது.

மேலும் தனுஷ் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனது 51 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகிறது. ஆகையால் தனுஷ் ஒரு மாஸ் வெற்றி படத்தை விரைவில் கொடுப்பார் என அவரது ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

dhanush-raayan
dhanush-raayan

Also Read : எஸ் ஜே சூர்யாவுக்கு வரிசை கட்டி இருக்கும் 5 படங்கள்.. தனுஷ்டன் மோத போகும் நடிப்பு அரக்கன்

Trending News