சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

அப்பா நீ திருடனா.? உருக்கமாக அனுப்பிய மெசேஜ்.. ஊருக்கு தான் உபதேசம் மௌனம் காக்கும் சிவகுமார்

Sivakumar: நடிகர் சிவகுமாரை பொறுத்தவரை என்னதான் ஒரு நடிகராக இருந்தாலும் குடும்பத்தில் இருப்பவர்களை கண்ணியம் கட்டுப்பாடு என்று ஒரு கட்டுக்கோப்பாக வைத்து குடும்பத்தை வழிநடத்தி வந்தார். அந்த வகையில் சூர்யா மற்றும் கார்த்தி பல நல்ல காரியங்களை செய்து பேரும் புகழையும் சம்பாதித்து இருக்கிறார்கள்.

ஆனால் தற்போது இவருடைய நெருங்கிய சொந்தக்காரரான ஞானவேல் ராஜா அமீரை பற்றி மோசமான குற்றச்சாட்டுகளை வைத்ததற்கு இவர் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் கொடுக்கவில்லை. அதாவது சிவக்குமார் குடும்பத்திற்கு ஞானவேல் ராஜா சொந்தக்காரர் என்பதையும் தாண்டி பினாமி என்கிற முறையிலும் பல பேச்சுக்கள் அடிபட்டு இருக்கிறது.

அதனால் இவர் அமீரை பற்றி தரக்குறைவாக பேசும் பொழுது இதை நிறுத்தும் விதமாக சிவக்குமார் முன் வந்திருக்க வேண்டும். கடைசியில் பல பிரபலங்கள் அமீர்க்கு சப்போர்ட்டாக குரல் கொடுத்திருந்தார்கள். அதனால் வேறு வழியில்லாமல் ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்டு விட்டார். ஆனால் இவ்வளவு விஷயங்கள் நடந்தும் இதுவரை சிவக்குமார் குடும்பத்தில் உள்ளவர்கள் பேசாமல் இருந்து வருகிறார்கள்.

Also read: அமீருக்கு அடிமேல் அடி கொடுத்த சிவக்குமார் குடும்பம்.. ஊரைவிட்டு ஓடிய இயக்குனர்

ஒரு மேடையையும் மைக்கும் கிடைத்துவிட்டால் போதும் சிவக்குமார், சூர்யா, கார்த்தி இவர்கள் அனைவரும் நங்கள் தான் இந்த உலகத்திலேயே ரொம்ப நல்லவர்கள் என்பதற்கு ஏற்ப பேசுவார்கள். அப்படிப்பட்ட இவர்கள் அமீர் விஷயத்தில் மௌனம் காப்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும். இதனால் டென்ஷனான அமீர் சிவகுமாருக்கு ஒரு உருக்கமான மெசேஜை அனுப்பி இருக்கிறார்.

அதாவது ஞானவேல் ராஜா சொன்ன பொய்யால் என் மகன் என்னை பார்த்து அப்பா நீ ஒரு திருடனா என்று கேள்வி கேட்கிறார். இதற்கு நான் என்ன பதில் சொல்றது என மெசேஜ் அனுப்பி இருக்கிறார். இதை பார்த்தும் எந்தவித பதிலும் சொல்லாமல் இப்ப வரை சிவக்குமார் மௌனமாக இருந்து வருகிறார். சிவகுமாரை பொறுத்தவரை ஊருக்கு மட்டும்தான் உபதேசம்.

இவரால் ஒரு குடும்பமே பாதிப்படைந்து இருக்கிறது என்பதை கொஞ்சம் கூட உணராமல் எனக்கு என்று இருப்பது எப்படி நல்லவராக இருக்க முடியும் என்று இவரை பற்றி தற்போது பலரும் கமெண்ட் பண்ணி வருகிறார்கள். இதுல வேற சம்பந்தப்பட்ட கார்த்தி மற்றும் சூர்யாவும் பேசாமல் அவர்களுடைய வேலையை மட்டும் பார்த்துகிட்டு வராங்க. ஞானவேல் ராஜா பேச ஆரம்பித்த பொழுதே இவர்கள் நினைத்து இருந்தால் வாயடைத்து விட்டிருக்கலாம். அதை செய்யாமல் பேசவிட்டு வேடிக்கை பார்த்து குளிர் காய்ந்திருக்கிறார்கள் என்று ஒருபுறம் பேச்சுக்கள் அடிபடுகிறது.

Also read: அலப்பறை தாங்காமல் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய சிவக்குமார்.. ஓவரா கூவியதால் துவம்சம் செய்த சூர்யா

Trending News