புதன்கிழமை, ஜனவரி 22, 2025

பீஸ்ட் பட ஹீரோயினுக்கு தாலி கட்டிய மஞ்சுமல் பாய்ஸ் ஹீரோ.. குருவாயூரில் இருந்து வெளியான அசத்தலான புகைப்படங்கள்

Aparna Das : கவினின் டாடா படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் தான் அபர்ணா தாஸ். இவர் விஜய்யின் பீஸ்ட் படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மலையாள சினிமாவில் இருந்து வந்த இவருக்கு தமிழ் சினிமா மிகுந்த வரவேற்பை கொடுத்து இருந்தது. மேலும் நல்ல நடிப்பு திறமை கொண்ட இவர் தமிழில் தொடர்ந்து படங்களில் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.

அபர்ணா தாஸை கரம்பிடித்த தீபக் பரம்பொல்

aparna-das-deepak
aparna-das-deepak

ஆனால் அவருக்கு இப்போது காதும் காதும் வைத்த படி திருமணம் நடந்துள்ளது. மேலும் அபர்ணா தாஸை கரம்பிடித்தது வேறு யாரும் இல்லை மஞ்சுமல் பாய்ஸ் படத்தில் நடித்த தீபக் பரம்பொல் தான்.

அபர்ணா தாஸ் மற்றும் தீபக் திருமண புகைப்படம்

aparna-das
aparna-das

அபர்ணாதாஸ் மற்றும் தீபக் இருவரும் சேர்ந்து மனோகரம் என்ற படத்தில் நடித்திருந்தனர். அப்போது தான் இருவருக்கும் காதல் மலர்ந்த நிலையில் இப்போது கல்யாண பந்தத்தில் இணைந்து இருக்கிறார்கள். குருவாயூரில் இவர்களது திருமணம் எளிமையாக நடந்துள்ளது.

குருவாயூரில் நடந்த அபர்ணா தாஸ் திருமணம்

deepak-aparna
deepak-aparna

சமீபத்தில் அபர்ணா தாஸின் நலங்கு புகைப்படம் இணையத்தில் வைரலாகி இருந்தது. இன்று கேரளா முறைப்படி இவர்களது திருமணம் நடைபெற்றுள்ளது. அதோடு அபர்ணா தாஸ் மற்றும் தீபக் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Trending News