Sandhiya Ragam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வருகின்ற சந்தியா ராகம் சீரியலில், லிங்கம் யாருக்கும் தெரியாமல் சாப்பாடு வாங்கிட்டு போவதை கதிர் நோட்டமிட்டு விட்டார். அதனால் லிங்கத்துக்கு தெரியாமல் கதிர், பின்னாடியே போய் கார்த்திக் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விடுகிறார். உடனே யாருக்கும் தெரியாமல் கதிர் போலீஸ்க்கு போன் பண்ணி கார்த்திக் இங்கேதான் இருக்கிறார், லொகேஷன் அனுப்புகிறேன் சீக்கிரம் வந்து விடுங்கள் என்று தகவலை கொடுக்கிறார்.
உடனே போலீஸ் குருவும் நீங்கள் அங்கே இருந்து கார்த்திக் எங்கேயும் தப்பித்து போகாதபடி பார்த்துக் கொள்ளுங்கள் நாங்கள் வந்து விடுகிறோம் என்று சொல்கிறார். அப்பொழுது கார்த்திக் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது அங்கிருந்து கிளம்பும் நேரத்தில் கார்த்திகை போக விடாமல் தடுப்பதற்கு கதிர் வீட்டுக்குள் நுழைந்து முயற்சி பண்ணினார்.
அப்பொழுது கதிருக்கும் கார்த்திக்கும் சண்டை ஏற்பட்டு கதிரை கீழே தள்ளிவிட்டு கதவை வெளியே லாக் பண்ணிட்டு ஒளிந்து கொண்டார். அப்பொழுது போலீஸ் வந்ததும் கதவை திறந்து பார்த்த நிலையில் கதிர் வந்து கார்த்திக்கு என்னை அடித்து விட்டு தப்பித்து விட்டார் என்று சொல்கிறார். பிறகு போலீஸ், கூடிய சீக்கிரத்தில் என்னிடம் சிக்கி விடுவான், நான் கண்டுபிடித்து உண்மை எல்லாம் வெளிக்கொண்டு வருவேன் என்று கதிரிடம் சொல்கிறார்.
பிறகு வீட்டிற்கு போன கதிர் நடந்த உண்மையை மாயா மற்றும் ஜானகிடம் சொல்கிறார். இதற்கிடையில் ஜானகி புவனேஸ்வரிடம் ஒரு மாதத்திற்குள் நான் கார்த்திக்கை கண்டுபிடித்து சாகவில்லை என்ற உண்மையை எல்லாத்துக்கும் நிரூபித்துக் காட்டுவேன் என்று சவால் விட்டிருந்தார். அதன்படி ஜானகி பெரியம்மா சொன்ன சவாலை நிறைவேற்றும் விதமாக மாயா மற்றும் கதிர் சேர்ந்து கார்த்திக்கை கண்டுபிடித்து விடுவார்கள்.
அடுத்ததாக தொடர்ந்து கதிர் என்னுடைய வாழ்க்கையில் குறுக்கிட்டு என்னை அடித்து விட்டு போகிறான். இதற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும் என்று லிங்கத்திடம் கார்த்திக் சொல்கிறார். அதற்கு லிங்கம் என்ன பண்ண வேண்டும் என்று சொல்லு அதன்படி நான் செய்கிறேன் என்று சொல்கிறார். உடனே கார்த்திக் அடியாட்களை ரெடி பண்ணி கதிர் கை காலை அடித்து எழுந்திருக்க முடியாத அளவுக்கு பண்ண வேண்டும் என்று சொல்கிறார்.
உடனே லிங்கமும் அடியாட்களை ஏற்பாடு பண்ணி தனம் மற்றும் கதிர் பைக்கில் வரும் பொழுது கதிருக்கு காயம் ஏற்படும் வகையில் அடித்து விட்டார்கள். இதனால் முடியாமல் இருக்கும் கதிருக்கு பணிவிடை பார்க்கும் விதமாக அனைத்து விஷயங்களையும் தனம் செய்கிறார். அந்த வகையில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கு இது ஒரு சந்தர்ப்பமாக அமைந்துவிட்டது. கதிரிடமிருந்து தனத்தை பிரிக்க வேண்டும் என்று நினைத்த கார்த்திக் செய்த செயலால் இருவரும் ஒன்றாக சேரும்படி நிலைமை மாறிவிட்டது.