தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் தல அஜித் அடுத்ததாக வலிமை படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவருக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான். அஜித்தை பற்றி ஏதாவது தவறாக பேசிவிட்டால் போலக்கடிச்சு விளக்கு வைத்து விடுவார்கள்.
சமீபத்தில் கூட பிரபலம் ஒருவர் தல அஜித் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக அவன் இவன் என ஒருமையில் பேசியதைக் கண்ட தல அஜித் ரசிகர்கள் கொந்தளித்து சமூக வலைதளங்கள் வாயிலாக அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
அவரைத் தொடர்ந்து தற்போது நடன இயக்குனர் ஒருவர் தல அஜித்தை பற்றி ஒரு தவறான தகவலை பரப்பியுள்ளார். தல அஜித் மற்றும் கே எஸ் ரவிக்குமார் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் வரலாறு.
இந்த படத்தில் அஜீத் ஒரு நடன கலைஞர் வேடத்தில் நடித்திருந்தார். அதற்கு நடனக் காட்சிகளை அமைத்து கொடுத்தவர் தான் நடன இயக்குனர் சிவசங்கர். இவர் நடன இயக்குனராக மட்டுமல்லாமல் சில படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ளார். குறிப்பாக சந்தானம் நடிப்பில் வெளியான கண்ணா லட்டு திங்க ஆசையா படத்தில் இவரது கதாபாத்திரம் வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் அவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், வரலாறு படத்தில் தல அஜித் சிறப்பாக ஆடியதற்காக புகழ்ந்து பேசியதாகவும், அதன்பிறகு தல அஜித்தை பார்க்க அவர் வீட்டுக்கு சென்றபோது அஜித் சார் உள்ள இல்லை என ஹிந்தி காரன் விரட்டியதாகவும் குறிப்பிட்டார். மேலும் அஜித் வீட்டில் கேமரா இல்லையா, யார் வருகிறார்கள் போகிறார்கள் என்று கூடவா தெரிந்து கொள்ள மாட்டார் எனவும் கூறி வருத்தப்பட்டுள்ளார்.
அஜித் மட்டும் நினைத்திருந்தால் தனக்கு ஆயிரம் பட வாய்ப்புகளை வாங்கிக் கொடுத்திருக்க முடியும், ஆனால் அவர் அப்படி செய்யாதது தனக்கு வருத்தம்தான் எனவும் குறிப்பிட்டுள்ளார். இவ்வளவும் சொல்லி விட்டு இறுதியில் தல அஜித் நல்ல மனிதன் எனவும் ஒரு வார்த்தையைப் போட்டு பிரச்சனையை பெருசாக்காமல் அப்படியே முடித்துக் கொண்டார்.