வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

விக்ரம் படத்தால் நெல்சனுக்கு ஆபத்து.. போயஸ்கார்டனில் இருந்து வந்த முக்கிய அழைப்பு

கமலின் படத்திற்காக நான்கு ஆண்டுகள் ஏங்கி இருந்த அவரது ரசிகர்களுக்கு ஒரு தரமான படத்தை கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ். விக்ரம் படம் கமலஹாசனை வேற லெவலில் தூக்கி வைத்துவிட்டது. இப்படத்தின் மாபெரும் வெற்றியால் கமல் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.

இதனால் கமலஹாசன் விக்ரம் படக்குழுவுக்கு ஏகப்பட்ட பரிசுகளை வாரி வழங்கி வருகிறார். விக்ரம் படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமலஹாசன் மற்றும் விக்ரம் படக்குழுவை போனில் அழைத்து வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் முதலில் ரஜினியை வைத்து படம் இயக்குவதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அது முடியாமல் போக லோகேஷ் கமலுக்கு கதை ரெடி பண்ணி ஹிட் கொடுத்துள்ளார். இந்நிலையில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ரஜினி தற்போது இளம் இயக்குனரான நெல்சனுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. ஐஸ்வர்யா ராய், பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் தற்போது விக்ரம் படத்தை பார்த்து மிரண்டு போன ரஜினிகாந்த் நெல்சனை போயஸ் கார்டனுக்கு அழைத்தது எனக்கும் இது போன்ற காட்சிகள் அமைக்க வேண்டும் என படத்தில் சில மாற்றங்கள் செய்துள்ளாராம்.

மேலும் இதற்காக தற்போது இப்படத்தில் கேஎஸ் ரவிக்குமாரையும் இணைத்துள்ளார் சூப்பர் ரஜினிகாந்த். இதனால் தலைவர் 169 படத்தின் படப்பிடிப்பு இன்னும் தாமதமாகும் என்று கூறப்படுகிறது. மேலும் விக்ரம் படத்தை போல் இந்த படத்தை எப்படி எடுப்பது என்ற யோசனையில் நெல்சன் உள்ளாராம்.

Trending News