வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

26 போட்டிகளில் மரண பயம் காட்டிய இந்திய அணி.. கெஞ்சு கேட்டு முத்தத்தை பறக்க விட்ட திலக் வர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் வளர்ச்சியை பார்த்து மொத்த நாடுகளுமே பிரம்மிப்பில் உள்ளது. குறிப்பாக இளம் வீரர்களை கொண்ட இந்த அணி மரண பயத்தை காட்டி வருகிறது. ரோகித், விராத் கோலி இல்லாத இந்திய அணி என்ன ஆகுமோ என அனைவரும் பயத்தில் இருந்தனர். ஆனால் நல்ல வேலை அவர்கள் இல்லை என்ற நிலையை உருவாக்கி விட்டனர்.

ஏற்கனவே டி20 உலக கோப்பையை இந்திய அணி வாங்கிவிட்டது. அதன் பிறகு ரோகித், விராத், ஜடேஜா ஆகிய மூவரும் இந்திய அணி t20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டனர். இப்பொழுது இளம் வீரர்கள் இந்திய அணியை வழி நடத்துகிறார்கள். அவர்களுக்கு சூரியகுமார் யாதவ் தலைமை தாங்கி வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற போட்டிகள் அனைத்திலும் பொளந்து கட்டுகிறது இந்த இளம் படை . உலக கோப்பையை வென்ற பின் இந்த இளம் படை களத்தில் குதித்தது. இவர்கள் விளையாடிய கடைசி 26 போட்டிகளில் 24 போட்டிகளை வெற்றி பெற்றுள்ளனர். அதில் ஒரு போட்டி நடக்கவில்லை மற்ற போட்டியில் தென்னாப்பிரிக்காவுடன் மட்டும் இந்த தொடரில் தோல்வியை தழுவியுள்ளது.

இப்பொழுது இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் அனைவரும் தங்கள் அபாயகரமான ஆட்டத்தால் மற்ற நாடுகளை அச்சுறுத்தி வருகின்றனர். பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடன் மோதி போட்டியை தங்களின் கட்டுக்குள் வைத்து ஜெயிக்கின்றனர்.

சஞ்சு சாம்சன், திலக் வருமா, அபிஷேக் ஷர்மா போன்ற வீரர்கள் ரோகித்தை விட பல மடங்கு தங்களது அதிரடியை காட்டி வருகின்றனர். குறிப்பாக சஞ்சு சாம்சனின் முரட்டடி எல்லா பலர்களையும் பயமுறுத்தி வருகிறது. 22 வயதான திலக் வர்மா ஐந்தாவது இடத்தில் இறங்கி வந்தார். தன்னை ஒன் டவுன் இறக்குமாறு சூரிய குமாரிடம் கெஞ்சி கேட்டு வாங்கி தொடர்ந்து இருமுறை நூறு ரன்களை குவித்தார். அதன்பின் அவருக்கு விட்டுக் கொடுத்ததற்கு முத்தத்தை மைதானத்திலேயே பறக்க விட்டார்.

Trending News