திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

12 வருடங்களுக்கு முன் நடந்த சர்ச்சை.. மன்னிப்பு கேட்டு தன்யா வெளியிட்டுள்ள பதிவு

Dhanya Balakrishnan : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள லால் சலாம் படம் பிப்ரவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தில் ரஜினி கேமியோ தோற்றத்தில் நடித்துள்ள நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதாநாயகியாக தனியா பாலகிருஷ்ணன் நடித்துள்ளார்.

இந்நிலையில் கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு முன்பு தன்யாவின் சமூக வலைத்தள பக்கத்தில் இடம்பெற்ற பதிவு இப்போது சர்ச்சைக்கு உள்ளானது. அதாவது சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் போட்டியிட்ட போது தன்யா ஒரு ட்விட் போட்டுள்ளார். அது தண்ணீக்காக எங்களிடம் இடம் பச்சை கேட்கிறீர்கள். பின் பெங்களூரை கொச்சைப்படுத்துகிறீர்கள் என்று பதிவிட்டு இருந்தார்.

இந்த சூழலில் சமீபத்தில் லால் சலாம் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய ஐஸ்வர்யா தனது தந்தை ரஜினி சங்கி இல்லை என்று குறிப்பிட்டிருந்தார். அதாவது சங்கியாக இருந்தால் லால் சலாம் படத்தில் நடித்திருக்க முடியாது என்று கூறினார். இதை அடுத்து ரஜினியை சங்கி இல்லை என்று சொல்லும் ஐஸ்வர்யா தமிழர்களை விமர்சித்த தன்யாவை ஏன் உங்கள் படத்தில் நடிக்க வைத்தீர்கள் என்று சர்ச்சை கிளம்பியது.

Also Read : 25 வருடம் மிளகாய் அரைத்த ரஜினி.. கமலின் பார்ட் டைம் அரசியல், தில்லாக இறங்கிய விஜய்யின் தலைமை எப்படி இருக்கும்.?

லால் சலாம் ரிலீஸ் நேரத்தில் இந்த பிரச்சனை பூதாகாரம் எடுக்க தன்யா ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதாவது அந்த கருத்து என்னுடையது இல்லை. 12 வருடங்களுக்கு முன்பு ன அந்தப் பதிவு ட்ரோல் செய்யும் நபரால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டுள்ளது. அதை நிரூபிக்க என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை.

மேலும் இந்த சர்ச்சைக்குரிய கருத்தினால் துரதிஷ்ட விதமாக என்னுடைய பெயர் அடிப்பட்டு உள்ளது. ரஜினிகாந்த் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆகியோருக்கு என்னால் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்துகிறேன். தமிழக மக்களிடமும் முழுமனதாக மனிப்பு கேட்கிறேன் என்று தன்யா கூறிப்பிட்டு உள்ளார்.

dhanya
dhanya

Also Read : கூடவே போய் பல்பை பீஸ்ஸாக்கிய ரஜினி.. ஆணியே புடுங்கல விஜய் போட்ட எண்டு கார்டு

Trending News