சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

ஜீவானந்தத்திற்கு க்ளு கொடுத்த தர்ஷினி.. குணசேகரனை செல்லா காசாக ஆக்கப்போகும் மல்லுவேட்டி மைனர்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், தர்ஷினியை யார் கடத்திட்டுப் போனார்கள் என்று தெரியாத நிலையில் அவரைக் காப்பாற்றுவதற்காக தற்போது ஜீவானந்தம் களத்தில் குதித்திருக்கிறார். இவர் ஹீரோவாக என்டரி கொடுப்பதற்காகத்தான் சக்திக்கு விபத்து ஏற்பட்டு படுத்த படுக்கையாக ஆக்கிவிட்டார்.

தற்போது ஜனனி, ஈஸ்வரி, நந்தினி மற்றும் ரேணுகா உடன் சேர்ந்து தர்ஷினியை கண்டுபிடிப்பதற்காக ஜீவானந்தம் முயற்சி எடுத்து வருகிறார். அதற்கு ஏற்ற மாதிரி ஒவ்வொரு விஷயங்களையும் கண்டுபிடித்து கிட்ட நெருங்கும் பொழுது தர்ஷினி கொடுத்த க்ளு மூலம் ஜீவானந்தத்திற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது.

அதாவது தர்ஷினி மூளையை யூஸ் பண்ணி, அந்த அடியாட்களிடம் எனக்கு மெடிக்கல் ஷாப்பில் போயி ஒரு மருந்து வேண்டும் என்று சொல்லி அதை ஒரு பேப்பரில் எழுதிக் கொடுத்திருக்கிறார். அந்த பேப்பரில் என்னையே இவர்கள் கடத்தி வைத்திருக்கிறார்கள், யாராவது காப்பாற்றுங்கள் என்று சொல்லி தர்ஷினி என அவர் பெயரையும் எழுதி கொடுத்திருக்கிறார்.

Also read: பேராசையால் கனவு கோட்டை கட்டி வரும் விஜயா.. ரோகிணி பற்றி உண்மையை தெரிந்து கொண்ட முத்து

இந்த பேப்பரை சரியாக அந்த அடியாட்கள் ஜீவானந்தத்திடம் காட்டப் போகிறார்கள். ஜீவானந்தமும் இதை பார்த்து பின்பு பெருசாக ரியாக்ஷன் கொடுக்காமல், அவர்களுக்குப் பின்னாலேயே போய் தர்ஷினி இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க போகிறார். ஆக மொத்தத்தில் ஜீவானந்தம் வந்த பிறகுதான் ஒரு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி கிடைக்கும் என்பதற்கு ஏற்ப கதை மாறிவிட்டது.

இதற்கிடையில் ஞானத்திற்கு தற்போது தான் ஞானம் பிறந்திருக்கிறது என்பது போல் அம்மாவிடம் பெற்ற பிள்ளையை யாராவது ஒளிச்சு வச்சு இத்தனை நாளாக தேடிக்கொண்டு அலைவார்களா என்று கேட்கிறார். அத்துடன் தர்ஷினியை எப்படியாவது நாங்களும் கண்டுபிடித்து கூட்டிட்டு வரோம் என்று ஞானம், கதிர், தர்ஷன் மற்றும் தாராவை கூட்டிட்டு வெளியேறுகிறார்கள்.

அப்பொழுது தாரா, பெரியப்பா எவ்வளவு தூரம் அவமானப்படுத்திருக்கிறார். அதன் பிறகும் அவர் உழைத்த காசு பணத்தில் சாப்பிட்டால் நல்லா இருக்காது என்று கதிருக்கு புத்திமதி கூறுகிறார். இதன் பிறகு கதிர் மற்றும் ஞானம் சுயமாக முடிவெடுத்து கட்டின பொண்டாட்டிகளையும், பெத்த பிள்ளைகளையும் கண்கலங்காமல் பாதுகாத்து பாசத்தைக் காட்டி வந்தால் இன்னும் சூப்பராக இருக்கும். அத்துடன் இதுவரை மல்லு வெட்டி மைனராக சுற்றிக் கொண்டிருந்த கதிர் மாறியதால் குணசேகரன் தற்போது செல்லா காசாக ஆகிவிட்டார்.

Also read: 4 மருமகளை காப்பாற்ற வந்த ஜீவானந்தம்.. தர்ஷினி விஷயத்துக்கு எண்டு கார்டு போடப் போகும் எதிர்நீச்சல்

Trending News