புதன்கிழமை, ஜனவரி 22, 2025

குணசேகரனின் ஆணவத்தை குழி தோண்டி புதைக்க போகும் தர்ஷினி.. அப்பாவின் கடமையை நிறைவேற்றிய ஜீவானந்தம்

Ethirneeachal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், தர்ஷினிக்கு ஒரு நல்ல சான்ஸ் கிடைத்தது. அதாவது உமையாளின் மகள் கீர்த்தி, தர்ஷினிடம் உனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லை என்றால் என்னிடம் சொல்லு. உன்னை இங்கு இருந்து எப்படியாவது தப்பிக்க விட்டு நானும் எஸ்கேப் ஆகி விடுவேன் என்று சொல்கிறார்.

ஆனால் தர்ஷினி பிடிச்சு வச்ச பிள்ளையார் மாதிரி அப்படியே இருந்துட்டு எனக்கு கல்யாணத்தில் இஷ்டம் என்று சொல்கிறார். உடனே கீர்த்தி அப்போ இனி உன் வாழ்க்கையை என்னால காப்பாற்ற முடியாது. உனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் என்றால் சீக்கிரத்தில் ரெடியாக என்று புடவையை கொடுக்கிறார்.

அதற்கும் எதுவும் பேசாமல் தர்ஷினி அமைதியாகவே இருக்கிறார். பிறகு உமையாள் மற்றும் குணசேகரன் தர்ஷினியை வலுக்கட்டாயமாக ரெடியாக சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள். அதன் பிறகு தர்ஷினி மணப்பெண் மாதிரி ரெடி ஆகிறார். ஆனால் குணசேகரனின் மருமகளாக இருக்கும் நான்கு பேரும் இந்த இடத்தை கண்டுபிடித்து கல்யாணத்தை நிறுத்துவதற்கு பதிலாக தர்ஷினியே நிறுத்துவதற்கு பிளான் பண்ணி விட்டார்.

குணசேகரனுக்கு எதிராக காய் நகர்த்தும் தர்ஷினி

அதாவது கல்யாணத்தில் இஷ்டம் இல்லை என்று கீர்த்தியிடம் சொல்லி தப்பித்தால் மொத்த பழியும் ஈஸ்வரி மற்றும் ஜீவானந்தம் மீது தான் விழும் என்று தர்ஷினி தானாகவே களத்தில் இறங்க முடிவு பண்ணி விட்டார். அந்த வகையில் தர்ஷினி எடுக்கப் போகும் முடிவு குணசேகரின் ஆணவத்தையே குழி தோண்டி புதைக்கும் வகையில் அதிரடியாக இருக்கப் போகிறது.

இதற்கு பக்கபலமாக இருந்து தர்ஷினிக்கு மறைமுகமாக அப்பாவின் கடமையை நிறைவேற்றியது ஜீவானந்தம் தான். அதாவது தர்ஷினி ஜீவானந்த இடம் இருக்கும் பொழுது எந்த இடத்தில் விவேகம் வேகமாக செயல்படனும் என்று தந்திரங்களை சொல்லிக் கொடுத்திருக்கிறார். அதன்படி தர்ஷினி காய் நகர்த்தப் போகிறார்.

இதற்கிடையில் கரிகாலன், குணசேகரன் செய்த அட்டூழியங்கள் அனைத்திற்கும் ஆதாரத்தை கையில் வைத்துக் கொண்டு வெறியுடன் சுற்றி வருகிறார். அத்துடன் கல்யாணத்திற்கு தேவையான பொருள்களை வாங்க வந்த ஐயரின் மனைவி மூலம் கல்யாண மண்டபத்தை ஜனனி கண்டுபிடித்து விட்டார். அதை உறுதி செய்து தற்போது மண்டபத்திற்கு போகிறார்கள்.

ஆனால் இவர்கள் போவதற்குள் தர்ஷினி அவருடைய கல்யாணத்தை நிறுத்தி குணசேகரனை தோற்கடித்து விடுவார். மேலும் இந்த கலவரத்தில் மிகப்பெரிய ட்விஸ்ட்டாக வரப்போவது ஜீவானந்தம் மற்றும் அப்பத்தா தான்.

Trending News