திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

Ethirneechal: குணசேகரனுக்கு சரியான ஆப்பு வைக்கும் தர்ஷினி.. ஜீவானந்தம் கொடுத்த டிரெய்னிங், ஏமாறப்போகும் மருமகள்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், குணசேகரன் இதுவரை வெளிப்படையாக மருமகளுக்கு டார்ச்சர் கொடுத்து வந்தார். ஆனால் தற்போது கமுக்கமாக இருந்து அனைவரையும் கவுப்பதற்கு ஸ்கெட்ச் போட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது நந்தினி அப்பா ஏற்பாடு பண்ணி இருக்கும் மொய் விருந்து பங்க்ஷனை செல்லாக் காசாக ஆக்கப் போகிறார்.

இவர் ஒன்னும் பண்ணாவிட்டாலும் குணசேகரன் பெயர் மற்றும் இவருடைய அப்பா பெயரை போடாததால் யாரும் வர மாட்டார்கள் என்று நினைத்து பத்திரிக்கையில் பெயர் போடுவதை தடுத்து நிறுத்தி விட்டார். ஆனாலும் நந்தினி நம்முடைய அப்பாவுக்காக சொந்தக்காரர்கள் வருவார்கள். அதன் மூலம் மொய் விருந்தில் பணம் கிடைக்கும்.

குணசேகரனை ஆட்டிப்படைக்க போகும் தர்ஷினி

அந்த பணத்தை வைத்து தேவையான பொருட்களை வாங்கி பிசினஸ் பண்ணலாம் என்று கனவு கண்டிருக்கிறார். ஆனால் அதில் எல்லாம் மண்ணள்ளிப் போடும் விதமாக குணசேகரன் கரிகாலன் வைத்து இன்னொரு பிளானை நடத்துவதற்கு பிளான் பண்ணி விட்டார். இதனால் நந்தினி மொய் விருந்து நிகழ்ச்சியில் ஏமாற்றத்துடன் நிற்கப் போகிறார். ஆக மொத்தத்தில் குணசேகரன் வீட்டில் இருக்கும் வரை அந்தப் பெண்களால் ஒன்றையும் சாதிக்க முடியாது.

இதற்கு பேசாமல் தர்ஷினி கொடுத்த ஐடியாவை ஃபாலோ பண்ணினால் நன்றாக இருக்கும். அதாவது குணசேகரனிடம் இருக்கும் சொத்தை வைத்து தான் அவர் ஓவராக அராஜகம் பண்ணுகிறார். அதனால் அதில் கையை வைத்து விட்டால் அடங்கி விடுவார் என்று தர்ஷினி ஐடியா கொடுக்கிறார்.

அதாவது கோர்ட்டில் அவர் மேல் கேஸ் போட்டால் சொத்தில் இருந்து பாதி பணத்தை வாங்கிவிடலாம். அதுவே அவருக்கு மிகப்பெரிய அடியாக விழும் என்று தர்ஷினி குணசேகருக்கு எதிராக பெரிய ஆப்பை வைக்க ஐடியா கொடுத்திருக்கிறார். இதையாவது அட்லீஸ்ட் கேட்டு அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் முயற்சி எடுத்துப் பார்த்தால் வெற்றி கண்டிப்பாக கிடைக்கும்.

யாரை எப்படி அடிச்சு தூக்க வேண்டும் என்று விவேகமாக செயல்படுவதற்கு ஜீவானந்தம் ட்ரெயினிங் கொடுத்து இருக்கிறார் போல. அந்த வகையில் தர்ஷினி பக்காவாக யோசித்து அப்பாவுக்கு எதிராக சரியான முடிவை எடுக்க ஈஸ்வரிடம் சொல்லி இருக்கிறார். இதனால் ஈஸ்வரியும் இத்தனை நாள் அராஜகம் பண்ணின குணசேகரனுக்கு சரியான பாடத்தை கற்பிக்கும் வகையில் மகள் ஆசைப்பட்ட மாதிரி ஒவ்வொரு விஷயத்தையும் பண்ணி வந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

Trending News