வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சிவகுமாரை எதிர்த்து நிற்கும் மருமகள்.. 71 வயது நடிகருடன் ஜோடி சேரும் ஜோதிகா

தமிழ் சினிமாவில் நடிகர்கள் அப்பொழுது முதல் இப்பொழுது வரை வயதானாலும் அவர்கள் ஹீரோவாக நடித்து வருகிறார்கள். ஆனால் நடிகைகள் எவ்வளவு பெரிய நடிகைகளாக இருந்தாலும் அவர்கள் திருமணத்திற்கு பிறகு நடிப்பது இல்லை. அப்படியே நடித்தாலும் சிறு சிறு வேடங்களில் மட்டுமே நடிக்க முடியும். இதில் நிறைய நடிகைகள் இருந்தாலும் முக்கியமாக ஜோதிகாவை பற்றி பல விஷயங்கள் பெருமையாக சொல்லலாம்.

ஜோதிகா நடிக்கும் பொழுது அவரது குறும்புத்தனமான நடிப்பின் மூலம் மக்களை இயல்பாக கவர்ந்தார். பல முக்கிய நடிகர்களுடன் நடித்தார், பின்னர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதற்குப் பின் ஒரு சில படங்கள் நடித்து பின்னர் மற்ற நடிகைகள் போல் இவரும் நடிக்காமல் ஒதுங்கி விட்டார் குடும்பத்திற்காக.

Also Read: 200 கோடி கொடுத்தும் மசியாத ரஜினி.. காசை பார்த்ததும் கரஞ்ச சூர்யா, ஜோதிகா

பல வருடங்கள் கழித்து சூர்யாவின் அனுமதி பெற்று பெண் கதாபாத்திரம் கொண்ட முக்கியமான திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். அனைத்து படங்களும் அவருக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. இது ஒருபுறமிருக்க சிவகுமாருக்கு இவர்கள் கல்யாணத்தில் சந்தோஷம் இல்லாமல் ஒப்புக்கொண்டு சூர்யாவுக்கு கல்யாணத்தை செய்து வைத்தார்.

இப்பொழுது ஜோதிகா நடிப்பது அவர் குடும்பத்தில் சிவகுமாருக்கு பிடிக்கவில்லை மற்றும் ஜோதிகா 2D என்டர்டைன்மென்ட் தயாரிப்பிலும் இவரது பங்கு இருந்து வந்தது. பல பிரச்சினைகள் காரணமாக ஒரு கட்டத்தில் இனிமேல் நான் நடிக்க மாட்டேன் என்று ஜோதிகா அறிவித்தார். தயாரிப்பு நிறுவனத்திலும் அவரது பெயர் நீக்கப்பட்டது, இது ஜோதிகா ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.

Also Read: ஜோதிகாவுடன் கிசுகிசுக்கப்பட்ட 3 பிரபலங்கள்.. அந்த ஸ்டைலிஷ் இயக்குனரை ஜெயித்து காட்டிய சூர்யா

ஆனால் தற்போது ஜோதிகா சிவகுமாரின் எதிர்ப்பை மீறி தமிழில் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். கண்ட நாள் முதல் படத்தின் இயக்குனர் பிரியாவுடன் ஒரு படத்திலும், பொன் பார்த்திபன் மாஸ்டர் படத்தில் திரைக்கதை எழுதியவருடன் இணைந்து மற்றுமொரு படத்தில் நடிக்க உள்ளார். இதைத்தாண்டி மலையாளத்திலும் மம்முட்டிக்கு ஜோடியாக நடிக்க போகிறார். தமிழில் பெண் கதாபாத்திரத்தில் நடிக்கும் பொழுதே சிவகுமார் எதிர்ப்பைக் காட்டினார். ஆனால் இப்பொழுது ஜோதிகா மலையாளத்துக்கும் நடிக்க சென்றுவிட்டார்.

பல விஷயங்களில் சிவக்குமார் முன்னுதாரணமாக இருந்தாலும் ஜோதிகா விஷயத்தில் செய்வது சரியல்ல. அதை மீறி ஜோதிகா தைரியமாக படத்தில் நடித்து வருகிறார் அதற்கு சூர்யாவும் பச்சைக்கொடி காட்டி வருகிறார். ஆனால் எப்படி பார்த்தாலும் குடும்பத்தில் ஏதோ ஒரு பிரச்சினை வரப்போகிறது என்பது மட்டும் உண்மை.

Also Read: கெட்ட வார்த்தை பேசிய ஜோதிகா.. கடுப்பாகி சூர்யா குடும்பம் வைத்த பெரிய ஆப்பு

Trending News