புதன்கிழமை, ஜனவரி 15, 2025

குணசேகரன் இல்லாததால் தம்பிகளை சீண்டிப் பார்க்கும் மருமகள்கள்.. குண்டு கட்டாக தூக்கிய போலீஸ்

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் வீட்டை விட்டு போனதால் ஒட்டு மொத்த கோபத்தையும் அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் மீது திரும்பி விட்டது. இதனைத் தொடர்ந்து கதிர் மற்றும் ஞானம் ஒவ்வொரு நாளும் அராஜகமாக நடந்து கொள்கிறார்கள். அந்த வகையில் இவர்கள் இருவரும் எல்லையை மீறியதால் இவர்களுக்கு சரியான பாடத்தை கற்பிக்க வேண்டும் என்று ஜனனி காய் நகர்த்தி வருகிறார்.

அதற்கேற்ற மாதிரி பொண்டாட்டி பேச்சு தான் வேதவாக்கு போல் சக்தியும் நடந்து கொள்கிறார். போலீசிடம் என் அண்ணன் குணசேகரன் காணாமல் போய் ஒரு வாரம் ஆகிவிட்டது. அவர் எங்கே இருக்கிறார் என்ன பண்ணிக் கொண்டிருக்கிறார் என்ற விஷயம் என்னுடைய அண்ணன் கதிர் மற்றும் ஞானத்திற்கு தெரியும். ஆனால் அவர்கள் எங்களிடம் அதைப் பற்றி சொல்லாமல் மறைக்கிறார்கள்.

Also read: டிஆர்பி-யில் பின்னி பெடலெடுக்கும் டாப் 6 சீரியல்கள்.. குணசேகரனின் பெயரை வைத்து ஆட்டம் காட்டும் எதிர்நீச்சல்

இதனால் நீங்கள் அவர்களை விசாரித்து எங்க அண்ணன் குணசேகரனை கண்டுபிடித்துக் கொடுக்க வேண்டும் என்று சக்தி போலீஸிடம் புகார் அளித்து விடுகிறார். இதனால் போலீசும் வீட்டில் வந்து கதிர் மற்றும் ஞானத்தை விசாரிக்கிறார்கள். ஆனால் வழக்கம் போல் போலீஸிடம் ஓவராக துள்ளியதால் கதிர் மற்றும் ஞானத்தை குண்டு கட்டாக போலீசார் தூக்கிக்கொண்டு போய் விட்டார்கள்.

மேலும் தன் மூத்த மகன் குணசேகரனையும் காணும் மற்ற இரண்டு மகன்களையும் போலீஸ் கூட்டிட்டு போய்விட்டது என்ற ஆதங்கத்தில் மருமகளை வாட்டி வதைக்கிறார் விசாலாட்சி. ஆனாலும் இதற்கெல்லாம் கொஞ்சம் கூட அசராத நந்தினி மற்றும் ரேணுகா மாமியாருக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறார்.

Also read: குணசேகரன் கேரக்டருக்கு பொருத்தமான ஆளு கிடைக்கலை.. புது ட்விஸ்ட் உடன் வரப்போகும் எதிர்நீச்சல் சீரியல்

அந்த வகையில் இந்த அளவிற்கு வன்மமாக பேசுவாரா என்று கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அளவிற்கு மொத்த கோபத்தையும் கொட்டி தீர்த்து விடுகிறார் குணசேகரனின் அம்மா. அப்பொழுது ஈஸ்வரி மற்றும் நந்தினியின் அப்பா வீட்டிற்கு வருகிறார்கள். இதுதான் கிடைத்த சான்ஸ் என்று இவர்களையும் வச்சு வாங்குகிறார்.

அத்துடன் என் மூத்த மகன் இல்லாததால் உங்க இஷ்டத்துக்கு ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். என் மகன்களையும் சீண்டி பார்க்கிறீர்கள். இதற்கு எல்லாம் என் மகன் வரட்டும். அவன் வந்த பிறகு இதற்கெல்லாம் சேர்த்து நல்ல அனுபவிக்க போகிறீர்கள் என்று சாபம் விடும் அளவிற்கு வார்த்தையால் கிழித்து தொங்க விடுகிறார். இந்நிலையில் இன்னும் இரண்டு நாட்களில் குணசேகரன் என்டரி கொடுக்கப் போகிறார்.

Also read: வெறுப்பை கக்கும் எதிர்நீச்சல் சீரியல், குணசேகரனை மிஞ்சும் கதிர்.. போற போக்கு பார்த்தா டம்மி ஆயிடும் போல

Trending News