வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

நினைச்சதை சாதித்துக் காட்டிய மருமகள்கள்.. ஆதிரை திருமணத்திற்கு ஏற்பாடு பண்ணும் சாருபாலா

Ethirneechal: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியலில், தர்ஷினியை கடத்தி கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிவிட்டது. ஆனால் இன்னும் வரை யார் கடத்தினார்கள், எதற்காக இதை பண்ணுகிறார்கள் என்ற ஒரு விஷயமும் வெளிவரவில்லை. அதே நேரத்தில் குணசேகரன் வீட்டில் உள்ள ஆண்கள் யாரும் தர்ஷனையை பற்றி கவலைப் பட்டதோடு சரி தேடும் முயற்சியில் பெருசாக இறங்கவில்லை.

ஆனால் பெண்களால் எதுவும் பண்ண முடியாது அவர்கள் வீட்டு வேலைக்கு மட்டும்தான் லாய்க்கு என்று நினைத்த குணசேகரனுக்கு சவுக்கடி கொடுக்கும் விதமாக நான்கு மருமகளும் தைரியமாக போராட ஆரம்பித்து விட்டார்கள். அதன்படி யாரோட தயவும் தேவையில்லை என்று கிட்டத்தட்ட தர்ஷினியை கண்டுபிடிப்பதற்கு நெருங்கி விட்டார்கள்.

அந்த வகையில் தர்ஷினியை அடைத்து வைத்த அந்த இடத்திற்கு போய் விட்டார்கள். ஆனால் அதற்கு முன் தர்ஷினி அந்த கும்பலிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக தப்பித்து ஓட ஆரம்பித்து விட்டார். தர்ஷினியை தேடிக்கொண்டு அங்கு இருக்கும் நபர்களும் தேட போய் விட்டார்கள். இதற்குப் பிறகு தர்ஷினி கடத்தி வந்த அந்த இடத்திற்கு ஈஸ்வரி, ஜனனி, நந்தினி மற்றும் ரேணுகா வந்துவிட்டார்கள்.

Also read: விஜயா மூஞ்சில் கரியை பூசிய முத்து.. ரோகிணி போல் பொய் பித்தலாட்டம் பண்ணும் மனோஜ்

பிறகு அந்த இடத்திற்கு வெளியே பார்த்தால் தர்ஷினி எழுதி வைத்த ஒரு பேப்பரை பார்த்து தர்ஷினி இங்கதான் இருக்கிறார் என்று அனைவரும் உள்ளே போய் விட்டார்கள். ஆனால் உள்ளே போய் பார்த்தால் தர்ஷினி அங்கே இல்லை. பிறகு அந்த இடத்தை சுற்றி ஒவ்வொருவரும் தேட ஆரம்பிக்கிறார்கள்.

இந்த போராட்டங்களுக்கு நடுவில் தர்ஷினையை கண்டிப்பாக அந்த நான்கு பெண்களும் காப்பாற்றி விடுவார்கள். வீட்டிற்கு வரும் பொழுது தர்ஷினியை கூட்டிட்டு தான் வருவோம் என்று சவால் விட்ட பெண்கள் தற்போது சாதித்து காட்டி விட்டார்கள். அடுத்தபடியாக கதிர் மற்றும் ஞானம் இதுவரை எந்த அளவிற்கு குணசேகரனுக்கு கொத்தடிமையாக இருந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து சக்தி மற்றும் ஆதிரையிடம் மன்னிப்பு கேட்கிறார்.

அடுத்தபடியாக சாருபாலா, ஆதிரைக்கும் அருணுக்கும் திருமணத்தை நடத்தி வைக்கப் போகிறார். இத்தனை நாள் குணசேகரன் தம்பிகளை வைத்து ஓவராக ஆட்டம் போட்டு இருந்தாலும் இனி மேலும் அவரால் ஜெய்ப்பதற்கு வாய்ப்பு இல்லை. இதில் ராமசாமி மற்றும் கிருஷ்ணசாமியும் குணசேகருடன் சேர்ந்து விட்டார்கள். ஆனாலும் கடைசியில் ஜெயிக்க போறது ஜனனியாகத்தான் இருக்கும்.

Also read: தர்ஷினி கிட்ட நெருங்கிய மருமகள்கள்.. பிளான் பண்ணி ஜீவானந்தத்தை தூக்கிய ராமசாமி, கிருஷ்ணசாமி

Trending News