புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சக்களத்தி சண்டையை மிஞ்சும் மருமகள்களின் சண்டை.. வீட்டையே பார்லர் ஆக்கிய பாண்டியன் ஸ்டோர்ஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கூட்டுக்குடும்ப கதைக்களத்தை கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சின்னத்திரை ரசிகர்களுக்கு இஷ்டமான சீரியலாக மாறி உள்ளது. இதில் நான்கு அண்ணன் தம்பிகளில் இந்த முறை கதிர் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

மீதமிருக்கும் மூன்று அண்ணன் தம்பிகள் ஒரே வீட்டில் இருக்கின்றனர். இதில் ஜீவாவின் மனைவி மீனா மற்றும் கண்ணனின் மனைவி ஐஸ்வர்யா இருவருக்கும் வீட்டில் அவ்வப்போது சலசலப்பு ஏற்படும். அதிலும் தற்போது வீட்டையும் விட்டு வைக்காமல் ஐஸ்வர்யா ஒரு பிளான் போட்டிருக்கிறார்.

Also Read: ஹோட்டலால் அசிங்கப்படும் கதிர்-முல்லை

ஏனென்றால் கண்ணனைப் படித்துக்கொண்டிருக்கும்போது திருமணம் செய்ததால் ஏதாவது ஒரு தொழில் துவங்க வேண்டும் என நினைத்து, அவருடைய தோழி பியூட்டி பார்லர் கடையில் இருக்கும் பொருட்களை எல்லாம் கொடுத்ததால், அதை வைத்து வீட்டிலேயே ஒரு பியூட்டி பார்லரை ஆரம்பித்திருக்கிறார்.

இதனால் பொறாமையில் மீனா ஐஸ்வர்யாவுடன் வாய் தகராறில் ஈடுபடுகிறார். ஆனால் ஐஸ்வர்யா பியூட்டி பார்லரை வீட்டிலேயே நடத்துவதற்கு முதலில் மூர்த்தி, தனம், ஜீவா உள்ளிட்டோர் மறுப்பு தெரிவித்தாலும், அதன்பிறகு அதற்கு சம்மதம் தெரிவித்தனர்.

Also Read: இரண்டு விவாகரத்து பிரபலங்களை தட்டி தூக்கிய விஜய் டிவி

ஆனால் மீனா மட்டும் ஐஸ்வர்யா வீட்டிலேயே பியூட்டி பார்லர் நடத்துவதற்கு தடையாக நிற்கிறார். வீட்டிலேயே பியூட்டி பார்லர் ஆரம்பித்தால் வீட்டில் இருப்பவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். மேலும் அவர்களால் வீட்டில் இருப்பவர்களுக்கு தொந்தரவும் வரக்கூடும் என மீனா குத்தி விட்டு வேடிக்கை பார்க்கிறார்,

புதிதாக துவங்கிய பியூட்டிபார்லர் மூலம் ஐஸ்வர்யா ஒரு வேளை வளர்ந்து விடுவாரோ என்று மீனா வயிறு பொசுங்குவது அப்பட்டமாக தெரிகிறது. இவ்வாறு ஒற்றுமையாக அண்ணன் தம்பிகள் இருந்தாலும் மருமகள்கள் வீட்டில் எல்லை மீறி வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

Also Read: விஜய் டிவி டிடி-க்கு வந்த பரிதாப நிலை

Trending News