வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நாளுக்கு நாள் எகிறும் ஜவான் படத்தின் பட்ஜெட்.. அட்லியால் விரயமாகும் பல கோடிகள்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய அட்லி தற்போது டாப் நடிகர்களின் படங்களை இயக்கும் அளவிற்கு வளர்ச்சி அடைந்துள்ளார். அதுவும் மிகக்குறுகிய காலத்திலேயே பாலிவுட் பக்கம் சென்றுள்ள அட்லீ ஷாருக்கானின் ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.

ஜவான் படத்தின் படப்பிடிப்பு நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அட்லி தனது குடும்பத்துடன் மும்பையில் ஒரு 5 ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருந்தார். இதற்கும் தயாரிப்பு நிறுவனம்தான் செலவு செய்து வந்தது. இந்நிலையில் தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Also Read :அத்துமீறி ஆட்டம் போடும் விஜய் சேதுபதி.. வாலை ஒட்ட நறுக்கிய அட்லீ

இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு போன்ற கோலிவுட் நட்சத்திரங்களும் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்த வருகிறார். இந்தப் படத்தில் ஷாருக்கான் வில்லன், ஹீரோ என இரண்டு வேடத்தில் நடித்த வருகிறார்.

இந்நிலையில் தற்போது கடந்த ஒரு மாதமாக சென்னையில் உள்ள ஆதித்யா ராம் பிலிம்ஸ் ஸ்டுடியோவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஆனால் நாளுக்கு நாள் ஜவான் படத்தின் பட்ஜெட் எகிறி கொண்டு போகிறது. ஏனென்றால் ஜவான் படத்திற்கு தேவையான எல்லா பொருட்களையும் வாங்கி போட்டு வேஸ்ட்டாக கிடைக்கிறதாம்.

Also Read :ஷாருக்கான் கூட நடிக்க விஜய் சேதுபதி கேட்ட சம்பளம்.. ஆடிப்போன அட்லி

ஸ்பீட் கேமரா கிரேன், விலை உயர்ந்த மின்விளக்குகள் போன்றவை எல்லாம் வாங்கியுள்ளனராம். சூட்டிங் இல்லாத நேரத்திலும் இவைகள் எல்லாம் வேஸ்ட்டாக இருக்கிறதாம். அதுமட்டுமின்றி ஒவ்வொன்றுக்கும் தனியாக ஆடிட்டிங் டீம் வைத்தும் காசு விரையம் தான் ஆகி வருகிறதாம்.

ஆனால் இந்த விஷயத்தில் அட்லி கொஞ்சமும் கவனம் செலுத்தாமல் உள்ளார். இதனால் ஜவான் படத்தின் பட்ஜெட்டை தாண்டி பல கோடிகள் செலவாகி வருவதாக கூறப்படுகிறது. மேலும் இன்னும் படம் முடிவதற்குள் தயாரிப்பாளர் ஒரு வழி ஆகிவிடுவார் என்று பலரும் பேசி வருகின்றனர்.

Also Read :தமிழ் படங்களை ஒதுக்கி அக்கட தேசத்திற்கு பறந்த 5 இயக்குனர்கள்.. பாலிவுட் வரை பட்டையை கிளப்பும் அட்லி

Trending News