தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான தொகுப்பாளர்களில் மிக முக்கியமானவர் திவ்யதர்ஷினி. ஆரம்பத்தில் சினிமா ஆசையில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தாலும் சினிமாவில் நினைத்த இடம் கிடைக்கவில்லை.
அதோடு நிறுத்தி விடாமல் அப்படியே தன்னுடைய ரூட்டை மாற்றிய தொகுப்பாளராக களம் இறங்கினார். சினிமாவில் ஹீரோயினாக இருந்தால் கூட அவருக்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருக்குமா என்பது சந்தேகம்தான்.
அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருந்த திவ்யதர்ஷினி கடந்த சில வருடங்களுக்கு முன்பு தன்னுடைய நெருங்கிய நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மூன்று வருடங்கள் நல்ல முறையாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிவடைந்தது. அதற்குக் காரணம் திருமணத்திற்கு பிறகு திவ்யதர்ஷினி குடும்பப் பெண்ணாக இல்லாமல் தன்னுடைய ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு குடியும் கூத்துமாக சுற்றி வந்தது தான் காரணம் என அவரது கணவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஆனால் டிடி அவரது கணவரை பற்றி தற்போது வரை எந்த ஒரு தவறான வார்த்தையும் தெரிவிக்காமல் அமைதி காத்து வருகிறார். விவாகரத்துக்கு பிறகு டிடி தன்னுடைய தொகுப்பாளர் வேலையை தொடர்ந்து வருகிறார். இருந்தாலும் சமீபத்தில் அவருக்கு நடந்த விபத்து காரணமாக சிலகாலம் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.
கடந்த சில வருடங்களில் டிடியை விவாகரத்து செய்த பிறகு அவரது கணவரை பற்றி எந்த ஒரு பேச்சும் இல்லை. இந்நிலையில்தான் நடிகர் சாந்தனுவுடன் இணைந்து ஸ்ரீகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
