வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சேட்டை செய்ததால் செருப்பால அடி வாங்கிய திவ்யதர்ஷினி..

விஜய் டிவியில் பல ஆண்டுகளாக முன்னணி தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் தான் டிடி எனும் திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியின் சொத்து என்று கூறும் அளவிற்கு அந்த சேனலுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்றே கூறலாம்.

அதுமட்டுமில்லாமல் திவ்யதர்ஷினி பா பாண்டி, சர்வம் தாளமயம் போன்ற படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகிக்கொண்டிருக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம் டிடி.

பொதுவாக பல நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு செம ஜாலியாக இருப்பதை வழக்கமாக வைத்துள்ள டிடி, மாலத்தீவுக்கு சுற்றுலா பயணம் சென்றபோது அங்கு எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்களை தனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

சமூக வலைதளங்களில் கிட்டத்தட்ட இரண்டு மில்லியனுக்கு மேலான ரசிகர்களை பெற்றுள்ள டிடி, அவ்வபோது அவர்களுக்கு வீடியோக்களை அப்லோட் செய்வதன்மூலம் என்டர்டைன்மென்ட் செய்துவருகிறார்.

DD-cinemapettai1
DD-cinemapettai1

அந்த வகையில் சமீபத்தில் இவர் வீட்டில் ஆடிக்கொண்டே வீடியோவை எடுக்க முயற்சிக்கும் போது வீட்டில் இருப்பவர்களிடம் இருந்து செருப்படி கிடைத்துள்ளது. அந்த வீடியோவையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் டிடி பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ஆனது தற்போது சோசியல் மீடியாக்களில் அவருடைய ரசிகர்களால் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

Trending News