வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

மேடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனுக்கு நச்சுனு முத்தம் கொடுத்த டிடி.. வைரலாகும் போட்டோ!

சினிமாத்துறையில் தொகுப்பாளராக வேண்டும் என்ற கனவு கொண்டுள்ள ஒவ்வொருவருக்கும் சிம்ம சொப்பனமாக இருப்பவர்தான் தொகுப்பாளினி திவ்யதர்ஷினி. ஏனென்றால் இதுவரை திவ்யதர்ஷினி அளவிற்கு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் திறமை கொண்ட ஒருவரை இதுவரை சினிமாத்துறையில் கண்டதில்லை என்கின்றனர் சிலர். அந்த அளவிற்கு திறமைசாலியாக விளங்குபவர் தான் டிடி.

மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக திகழ்வதோடு, 20 ஆண்டுகளுக்கு மேல் சினிமா துறையில் இருந்தாலும் இளமை ததும்பும் முகபாவத்துடன் இத்தனை ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அதில் ஜாம்பவானாக இருந்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் நடிகை டிடி வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத்துறைகளிலும் ஒரு ரவுண்டு அடித்து வருகிறார். சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளிவந்த ‘முக்காதே பெண்ணே’ என்ற ஆல்பம் பாடல் பெரும் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் டிடி விருந்து நிகழ்ச்சி ஒன்றில், நடைமேடையில் நடிகர் ஒருவருக்கு முத்தம்  கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் தற்போது காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

அதாவது சமீபத்தில் நடைபெற்ற தனியார் மீடியா நிறுவனத்தின் விருது விழாவில் டிடி பங்கேற்றது மட்டுமில்லாமல், விருது ஒன்றையும் பெற்றுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இந்த விழாவில் பங்கேற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனுக்கு தனது கையாலே விருது வழங்கியுள்ளார் டிடி. அப்போதுதான் டிடி குமரனுக்கு கன்னத்தில் ஆசையாக முத்தம் கொடுத்திருக்கிறார்.

kumaran-DD
kumaran-DD

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் காட்டுத் தீ போல் பரவி வருகிறது.

Trending News