Deadpool & Wolverine Review: இப்போதைய சினிமா, மல்டி வெர்ஸ் கான்செப்ட் என்பதை சுற்றி இருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சினிமா ரசிகர்கள் அதை அதிகமாக எதிர்பார்க்க ஆரம்பித்தது தான். தமிழ் சினிமாவில் கூட லோகேஷ் கனகராஜ் இந்த புது டெக்னிக்கை வளர்த்து வருகிறார்.
எக்ஸ்மேன் படத்தில் நாம் எல்லோரும் வியந்து பார்த்த வோல்வரின் கதாபாத்திரத்தை மீண்டும் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக கொடுத்திருக்கிறார் இயக்குனர். மார்வெல் உலகமே அழிவதை கண்டுகொள்ளாமல், தன்னுடைய ஒன்பது நண்பர்களை காப்பாற்ற டெட்பூல் ஒரு பெரிய முயற்சியை எடுக்கிறார்.
தன்னால் எல்லாம் முடியும் என்று நினைத்திருந்த அவர் ஒரு கட்டத்தில் வோல்வரின் தான் உண்மையான காப்பான் என்பதை கண்டுபிடிக்கிறார். செத்துக்கிடக்கும் ஸ்டில் வோல்வரின் பார்த்து அதேபோன்று பல பேர் வித்தியாசமான வகைகளை தேடுகிறார்.
கடைசியில் அவருக்கு ஒன்றுக்கும் உதவாத குடிகார வோல்வரின் கிடைக்கிறது. மஞ்சள் நிற சூட்டில் சூப்பர் ஹீரோ போல் வரும் வோல்வரின் டெட்பூலுக்கு உதவினாரா என்பது தான் படத்தின் கதை. சூப்பர் மேன் படம் குழந்தைகள் விரும்பி பார்ப்பார்கள் என்றெல்லாம் அந்த பக்கம் போய்விட வேண்டாம்.
இதில் இரட்டை அர்த்த வசனங்கள் கூட கிடையாது. நேரடியாகவே அபத்தமான வசனங்கள் தான் நிறைய பேசப்பட்டு இருக்கிறது. சென்சார் போர்டு கூட எந்த காட்சியிலும் கை வைக்காமல் விட்டிருக்கிறது. நண்பர்களுடன் போய் உட்கார்ந்து ஜாலியாக பார்த்துவிட்டு வரலாம். வெயிட்டான வில்லன் கதாபாத்திரம் இல்லை என்பது படத்தில் பெரிய மைனஸ்.
டெட்பூல் மற்றும் வோல்வரின் இடையே நடக்கும் சண்டைகள் ஆக்ஷனில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. செல்ப் ட்ரோல் காமெடிகள் வயிறு குலுங்கி சிரிக்கும் அளவுக்கு சுவாரசியமாக இருக்கிறது. மொத்தத்தில் படத்தின் காமெடி டயலாக்குகள் தான் பெரிய அளவில் வொர்க் அவுட் ஆகி இருக்கிறது.
கிளைமாக்ஸ் காட்சியில் முழு நேரமும் தியேட்டரில் உட்கார்ந்து இருக்கும் ரசிகர்களுக்கு புரியாத அளவிற்கு இருக்கிறது. இருந்தாலும் இந்தப் படம் தியேட்டர் ஆடியன்ஸ்களுக்கு பெரிய கொண்டாட்டம்தான்.