December 10 to 13 OTT Release Movies : டிசம்பர் மாதம் இரண்டாவது வாரம் ஓடிடியில் எதிர்பார்க்காமல் பல படங்கள் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சத்தமே இல்லாமல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் விக்ரமின் தங்கலான் படம் வெளியாகி இருக்கிறது.
அடுத்ததாக மலையாளத்தில் லியோனா லிஷோய், இந்திரன்ஸ், அதிரா பட்டேல் ஆகியோர் நடிப்பில் உருவான கனகராஜ்யம் படம் அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது. சைக்கலாஜிக்கல் க்ரைம் திரில்லர் படமான Bougainvillea சோனி லைவ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 13 ஸ்டீரிம்ங் ஆகிறது.
மேலும் இப்போது அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் Venom, STRING, The Crow, Secret Level, Cash Out ஆகிய படங்கள் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டிருக்கிறது. ஜியோ சினிமாவில் Dune Prophecy சீசன் 1இல் எபிசோட் 4 ஸ்ட்ரீம் ஆகி இருக்கிறது.
Hulu ஓடிடி தளத்தில் சுகர் கேன் படம் வெளியாகி இருக்கிறது. மேலும் டிசம்பர் 11ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் One Hundred Years of Solitude & Maria ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கிறது. டிசம்பர் 12ஆம் தேதி நெட்பிளிக்ஸில் ரொட்டி கபட ரொமான்ஸ் படம் வெளியாகிறது.
மேலும் ஆங்கிலத்தில் No Good Deed & La Palma ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகிறது. அமேசான் பிரைமில் Red One படம் வெளியாக உள்ளது. டிசம்பர் 13 ஆம் தேதி Mismatched, CarryOn & 1992 Miniseries ஆகியவை நெட்பிளிக்ஸில் ரீலிஸ் ஆக உள்ளது.
டிஸ்னி ஹாட் ஸ்டாரில் Dahomey, Elton John, Invisible ஆகியவை ஸ்ட்ரீமாகிறது. Lions gate play ஓடிடி தளத்தில் war of the world’s மற்றும் Paramount plus ஓடிடி தளத்தில் Dexter படமும் வெளியாகிறது.