வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 20 படங்கள்.. மீண்டும் கல்லா கட்ட வரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்

This Week OTT Release Movies : கடந்த வாரம் நயன்தாராவின் அன்னபூரணி மற்றும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவான பார்க்கிங் படங்கள் வெளியாகி இருந்தது. ஆரம்பத்தில் நல்ல வசூலை பெற்று வந்த இந்த படங்கள் சென்னையில் ஏற்பட்ட புயலின் காரணமாக கடந்த வாரம் வசூலில் பெரிய அளவு ஏமாற்றத்தை சந்தித்தது.

இந்நிலையில் இந்த வாரம் ஓடிடியில் கிட்டத்தட்ட 20 படங்கள் வெளியாகிறது. அந்த வகையில் வருகின்ற டிசம்பர் 8 ஆம் தேதி  ஓடிடி தளத்தில் என்னென்ன படங்கள் வெளியாகிறது என்பதை பார்க்கலாம். திரையரங்குகளில் வெளியாகி வசூல் வேட்டையாடிய கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகிறது.

மேலும் கார்த்தி நடிப்பில் உருவான ஜப்பான் படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் உடன் போட்டி போட்ட நிலையில் வசூலில் பெருத்த அடி வாங்கியது. இப்போது இந்த படம் நெட்பிளக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 11 வெளியாகிறது. மேலும் தமிழில் தியேட்டரில் கட்டில், தீ இவன் மற்றும் ரஜினி போன்ற படங்கள் வெளியாகிறது.

Also Read : 2023 அதிகமா எதிர்பார்க்கப்பட்டு புஸ்ன்னு போன 5 நடிகர்கள்.. நயன்தாராவிற்கு கொக்கி போடும் கோமாளி

மேலும் கோஸ் முனிசாமி வீரப்பன் ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது. நெட்பிளிக்ஸில் ஆங்கில படமான பிளட் வெசல் படம் வெளியாகிறது. மேலும் பிளட் கோஸ்ட் என்ற ஃப்ரெஞ்ச் மொழி உருவான சீரிஸ் ஓடிடி தளத்தில் தான் வெளியாகிறது. மலையாளத்தில் பெண்டுலம் என்ற படம் சைனா பிலே ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இது தவிர ஹிந்தி, அரபிக் மற்றும் கொரியன் ஆகிய மொழிகளிலும் நிறைய படங்கள் வெளியாக இருக்கிறது. அந்த வகையில் இந்த வாரம் மட்டம் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் படி கிட்டத்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிறது.

Also Read : புயலால் வலுவிழந்த நயன்தாராவின் அன்னபூரணி.. தரமான 3 படங்களும் சோகத்தில் மூழ்கிய சம்பவம்

Trending News