சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

பாலா மட்டும் தான் உதவி செய்வானா.! வரிஞ்சு கட்டிட்டு வந்த புகழ்.. விஜயகாந்த் சமாதியில் எடுத்த சபதம்

Vijay Tv Pugazh: யார் எந்த நிலைமையில் இருந்தாலும் எப்பொழுதுமே கடைசி வரை அவருடைய உண்மையான கேரக்டர் தான் அவர்களை தூக்கி நிறுத்தும் என்று சொல்வார்கள். அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ விஜய் டிவி பாலாக்கு நல்லாவே கை கொடுத்து இருக்கிறது. ஒருவர் கஷ்டத்தில் இருக்கும் பொழுது அவர்களுக்கு ஒரு நிமிடம் கூட தயக்கம் காட்டாமல் உதவுபவர்கள் நிச்சயமாக வாழ்நாட்களில் யாராலயும் மறக்க முடியாது.

அந்த இடத்திற்கு தான் விஜய் டிவி பாலா போயிருக்கிறார். மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓடோடி போய் உதவி செய்தார். அத்துடன் அதற்கு முன் ஆம்புலன்ஸ் இல்லாத ஒரு சில ஊருக்கு ஆம்புலன்ஸ்களை வாங்கி கொடுத்து இருக்கிறார். அதாவது விஜயகாந்த் பாஷையில் சொல்லணும் என்றால் கடவுளுக்கு கொடுப்பதை விட கஷ்டப்படும் ஏழைகளுக்கு செய்யுங்கள் அதுவே உன்னதமான மனசு என்றார்.

அது போலவே விஜய் டிவி பாலாவும் ஒவ்வொரு நல்ல செயல்களையும் செய்து வருகிறார். இதனால் இவருக்கு கிடைத்த பாராட்டும் புகழும் எக்கச்சக்கம். இதைப் பார்த்த விஜய் டிவி பிரபலங்களில் சிலர் நம்ம கூட வளர்ந்தவன் இந்த நிலைமைக்கு வந்துவிட்டார் என்ற பொறாமையில் பொங்குகிறார்கள்.

Also read: விஜயகாந்த்க்கு ஜோடி போட்டு அரசியலில் ஆட்டம் கண்ட 6 நடிகைகள்.. கமலுக்கு குடை பிடிக்கும் ஹீரோயின்

அதனால் நம்மால் முடிந்த நல்லதையும் செய்வோம் என்று பொறாமையில் பண்ண ஆரம்பித்து விட்டார்கள். அப்படித்தான் விஜய் டிவி குக் வித்து கோமாளி நிகழ்ச்சியில் மூலம் பிரபலமான புகழ் தற்போது விஜயகாந்த் சமாதிக்கு போயிட்டு அங்கே ஒரு இன்டர்வியூ கொடுத்திருக்கிறார். அதில் மறைந்த விஜயகாந்த் ஐயா சார்பாக தினமும் என்னுடைய கே கே நகரில் இருக்கும் ஆபீஸில் தினமும் 50 சாப்பாடுகளை போடுவதற்கு முடிவு எடுத்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

உண்மையிலே இவர் செய்வது நல்ல விஷயம் தான் பாராட்டக்கூடியது தான். ஆனால் ஏன் இந்த நல்ல காரியத்தை சென்னை புயலால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பொழுது எந்த ஒரு உதவியையும் செய்யாமல் போய்விட்டார். இப்பொழுது செய்வதற்கான காரணம் விஜய் டிவி பாலா எடுத்த பேரும் புகழும் தான். அதுதான் இவரை இந்த அளவிற்கு தூண்டியிருக்கிறது.

எப்படியாவது நாமும் நல்ல பேரை எடுத்து விட வேண்டும். அதே நேரத்தில் இப்பொழுது ஏதாவது செய்ய தொடங்கி விட்டால் தப்பா போயிடும் என்று நினைத்தவருக்கு விஜயகாந்த் சமாதிக்கு போன புகழ் உணவு வழங்கும் திட்டத்தை கூறி பேரும் புகழை தேடப் பார்க்கிறார். எது எப்படியோ செய்ற விஷயத்தை உருப்படியா செய்தால் சந்தோஷம். ஆனால் சும்மா வாய் வார்த்தைக்காக இல்லாமல் கஷ்டப்படும் மக்களுக்கு ஏதாவது உதவி கிடைத்தால் பாராட்டுக்கள் தான்.

Also read: பெரிய நடிகர்களுக்கு கூட வராத யோசனை.. சொன்னதை செய்து காட்டிய விஜய் டிவி பாலா

Trending News