திங்கட்கிழமை, பிப்ரவரி 10, 2025

நேத்ரனின் இறுதி நாட்கள் இப்படி தான் இருந்தது.. முதன் முறையாக மனம் திறந்த தீபா நேத்ரன்

Deepa Nethran: சின்னத்திரை நடிகர் நேத்ரன் மறைந்து ஒரு மாதங்கள் ஆகிவிட்டது. கேன்சர் கண்டறியப்பட்டு கிட்டத்தட்ட ஆறு மாதத்திற்குள் இவர் உயிரிழந்திருக்கிறார்.

தற்போது அவருடைய காதல் மனைவி மற்றும் சின்னத்திரை நடிகை தீபா தன்னுடைய கணவரின் கடைசி நாட்கள் பற்றி மனம் திறந்து இருக்கிறார்.

நேத்திரனுக்கு அடிக்கடி அதீத வயிற்று வலி ஏற்பட்டு இருக்கிறது. ஒரு கட்டத்தில் இந்த வயிற்று வலியால் அவருக்கு தூக்கம் இல்லாமல் போயிருக்கிறது.

இதனால் ஸ்கேன் எடுத்து பார்த்த பொழுது தான் அவருக்கு வயிற்றில் கேன்சர் இருப்பது தெரிய வந்திருக்கிறது.

மனம் திறந்த தீபா நேத்ரன்

பொருளாதார நிலைமை காரணமாக அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை எடுத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 80 சதவீதம் வயிற்றுப் பகுதியை அகற்றிவிட்டு கணையத்துடன் இணைத்து இருக்கிறார்கள்.

ஹீமோதெரபி கொடுப்பதால் நேத்ரன் எப்போதுமே சோர்வுடன் தான் காணப்படுவாராம்.ஹீமோதெரபி கொடுத்து இரண்டு நாட்களுக்குத்தான் சாதாரணமாக இருப்பாராம்.

70 கிலோவில் இருந்தவர் முப்பத்தி எட்டு கிலோ வரை குறைந்துவிட்டார். கிட்டத்தட்ட அவருடைய உடல் எலும்பு கூடு போல் மாறியதால் தன்னை யாரும் பார்க்க வருவதை அவர் விரும்பவில்லை.

இறுதி நாட்களில் படுத்த படுக்கையிலேயே தான் இருந்திருக்கிறார். தீபா தான் அவருக்கு தேவையான எல்லா உதவிகளையும் செய்து இருக்கிறார்.

அது மட்டும் இல்லாமல் இந்த உடல்நிலை சரியில்லாமல் இருந்த காலகட்டத்தில் அவருக்கு ரொம்பவே கோபம் வருமாம்.

கடைசியாக ரொம்பவும் வயிற்று வலி ஏற்பட்டதால் எழுந்து நடக்க கூட முடியாத சூழ்நிலையில் மருத்துவமனையில் சேர்த்து இருக்கிறார்கள்.

மருத்துவர்கள் உடனே தீபாவிடம் தைரியமாக இருங்கள் அவருக்கு நாடித்துடிப்பு ரொம்பவும் குறைவாக இருக்கிறது என்று சொன்னார்களாம்.

இதைத் தொடர்ந்து நேத்து எனக்கு ஆக்சிஜன் குறைந்ததால் செயற்கை சுவாசம் வைத்திருக்கிறார்கள். செயற்கை சுவாசம் வைத்து கிட்டத்தட்ட 3 மணி நேரத்தில் அவருடைய உயிர் பிரிந்து இருக்கிறது.

Trending News