ஐபிஎல் 2021 சிஎஸ்கே அணி முதல் போட்டியிலேயே டெல்லி அணியிடம் தோல்வியை தழுவியது. இரண்டாவது ஐபிஎல் போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. சென்னை மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இரண்டாவது போட்டி நாளை நடக்க உள்ளது.
கடந்த முறை நடைபெற்ற மும்பை மைதானத்திலேயே இந்த போட்டி நடக்க உள்ளதால், சிஎஸ்கே அணி பந்துவீச்சாளர்களை வலுப்படுத்தி வருகிறது. சிஎஸ்கேவின் பவுலிங் படை தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறது.
பஞ்சாப் அணி மிகப்பெரிய பேட்டிங் படையை கொண்டுள்ளது. முதல் போட்டியிலேயே 200 ரன்களுக்கு மேல் அடித்து வெற்றி பெற்றது அந்த அணியில் ரைலி, ஜெய் ரிச்சர்ட்சன் என்று சிறப்பான பவுலர்களும் உள்ளனர்.
ஆனால் சென்னை அணியை பொறுத்தவரை வலுவான பேட்டிங் ஆர்டர் இருந்தாலும், பவுலிங் யூனிட்டில் ரொம்பவே வீக்காக உள்ளது. இந்நிலையில் நேற்று பயிற்சியில் ஈடுபட்ட தீபக் சாஹர் பந்து வீசுவதற்கு பெரிதும் சிரமப்பட்டு உள்ளார்.
வலைப்பயிற்சியிலும் இவர் ஸ்விங் செய்ய முடியாமல் கஷ்டப்படுவதாக தெரிகிறது. சமீப காலமாக இவரால் சரியாக பந்தை ஸ்விங் செய்ய முடியவில்லை. பயிற்சியிலும் இவரால் நேற்று திட்டமிட்டபடி பவுலிங் செய்ய முடியவில்லை.
இதனால் கடுப்பான தோனி பந்தை ஒழுங்காக வீசுங்கள், பஞ்சாப் அணியை பொறுத்தவரைக்கும், பவுலர்கள் தான் வெற்றி தோல்வியை தீர்மானிப்பார்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.