புதன்கிழமை, ஜனவரி 15, 2025

போலி வீடியோவால் பாதிக்கப்பட்ட ராஷ்மிகாக்கு புதிய பதவி.. இப்ப வாங்கடா எல்லாம் வரிசைல

சில மாதங்களுக்கு முன்பு டீப் ஃபேக் வீடியோவால் பாதிக்கப்பட்ட ராஷ்மிகா மந்தனா சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் தேசிய விளம்பர தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் இந்த அறிவிப்பால் அவருக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும் குவிந்து வருகிறது.

நேசனல் கிரஷ் ராஷ்மிகா

கார்த்தி ஹீரோவாக நடித்த சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. அவர் அறிமுகமான படம் சுமாராக இருந்தாலும் ராஷ்மிகா மந்தனாவின் குறுகுறு விழியும் கியூட் அழகும் ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டது. அதனால் முதல் படத்திலேயே அவருக்கான வரவேற்பு அதிகம் இருந்தது. இதையடுத்து, அவர் அடுத்து தமிழில் எப்போது நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தளபதியின் வாரிசு படத்தில் நடித்து ரசிகர்களின் பேவரெட் ஹீரோயினாகவும் மாறிவிட்டார்.

தெலுங்கு, தமிழ் சினிமாவைத் தாண்டி, கடந்தாண்டு, ரன்பீர் கபூரின் அனிமல் படத்தின் மூலம் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அப்படத்தின் இடம்பெற்றா படுக்கையறை காட்சிகள், முத்தக் காட்சிகள் இதெல்லாம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தெந்திய சினிமாவில் மட்டும் கவர்ச்சியின்றி நடித்துவிட்டு, பாலிவுட் சென்றதும் ஏன் இப்படி நடித்தார்? என பலரும் கேள்வி எழுப்பினர்.

இருப்பினும் பாலிவுட் வாய்ப்பை அனிமல் படத்தின் மூலம் சரியாக பயன்படுத்திக் கொண்டு இப்போது பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலர்ம் வருகிறார். முன்னணி நடிகர்களும் தங்கள் படங்களில் ராஷ்மிகாவை ஹீரோயினாக நடிக்க சிபாரிசு செய்து வருகின்றனர். அந்தளவு நேசனல் கிரஷாக மாறிவிட்டார் ராஷ்மிகா. இந்த நிலையில் ராஷ்மிகா நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் புஷ்பா 2. இப்படத்தின் முதல் பாகம் ரூ.300 கோடிக்கு மேல் வசூல் குவித்து, சூப்பர் ஹிட்டாக அமைந்தது. இப்படத்தின் ஹீரோ அல்லு அர்ஜுனுக்கும் தேசிய விருது பெற்றுக் கொடுத்தது. இதனால் இப்படத்தின் 2 ஆம் பாகத்தின் மீது இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அல்லு அர்ஜூன், ராஷ்மிகா ஜோடியை திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர்.

வரும் டிசம்பர் 6 ஆம்தேதி புஷ்பா 2 படம் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இன்னும் இப்படம் வெளியாக இன்னும் 50 நாட்கள் இருக்கும் நிலையில் படக்குழு தீவிரமாக புரமோசன் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இப்படமும் ராஷ்மிகாவின் கேரியலில் முக்கிய படமாக அமையவுள்ளது. விஜய் 69 படத்திலும் ராஷ்மிகா நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் அவர் நடிக்கவில்லை. இது தளபதி ரசிகர்கள் இடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ

இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ சில மாதங்களுக்கு இணையதளத்திலும் சமூக வலைதளங்களிலும் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் பாதிக்கப்பட்ட ராஷ்மிகாவுக்கு சக நடிகர்கள் ஆறுதல் கூறியிருந்தனர். இந்த டீப் ஃபேக் வீடியோ உருவாக்கி, வெளியிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்து, இந்த தீய செயல்களில் ஈடுபடுவோருக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது. தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்திற்கு பின் கஜோல், ஜோதிகா, சச்சின், மோடி உள்ளிட்டவர்கள் டீப் ஃபேக் வீடியோ வெளியாகி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனா இந்த டீப் ஃபேக் வீடியோ சம்பந்தமாக சைபர் கிரைமில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இதையடுத்து, அந்த வீடியோ தயாரித்து, சமூக வலைதளங்களில் பரவ விட்டவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், மாணவிகள், பெண்கள், பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வரும் நிலையில், அவர்கள் எல்லோருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மைய தேசிய விளம்பர தூதராக ராஷ்மிகாவை மத்திய அரசு நியமித்துள்ளது.

வீடியோ வெளியிட்ட ராஷ்மிகா மந்தனா

இதுகுறித்து தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை ராஷ்மிகா பதிவிட்டுள்ளார். அதில், ”டீப் ஃபேக் வீடியோவால் நான் பாதிக்கப்பட்டேன். அப்போது சைபர் கிரைமில் புகார் அளித்த பின், அதை உருவாக்கியவர்களைக் கைது செய்தனர். இதுபோன்ற வீடியோக்களால் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு இந்திய சைபர் கிரம் மையம் எப்போது உதவிகரமாக இருக்கும். இந்த டிஜிட்டல் உலகில் இதுபோன்ற குற்றங்களில் இருந்து உங்களை முடிந்த அளவு இது பாதுகாக்கும்” என்று விழிப்புணர்வு வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும், நடிகை ராஷ்மிகாவுக்கு இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம் பிராண்ட் அம்பாசிட்டர் பதவியை அவருக்கு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. அந்த வீடியோவால் பாதிக்கப்பட்ட ராஷ்மிகா துணிந்து புகார் அளித்து, அந்த பாதிப்பில் இருந்து விரைந்து வெளியே வந்து இன்று பிராண்ட் அம்சாசிட்டராக நியமிக்கப்பட்டதற்கு அவருக்கு பலரும் பாராட்டுகள் கூறி வருகின்றனர்.

Trending News