திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

லிவிங் டு கெதர் ஓகே, ஆனால் காதல் வேண்டாம்.. முன்னால் காதலரை அதிரவைத்த தீபிகா படுகோனே

ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை அனைத்து ரசிகர்களிடையேயும் நல்ல பரீச்சயமான தீபிகா படுகோனே தன்னுடைய திருமண விஷயத்தில் கணவர் ரன்பீர் சிங்கிடம் கூறியது அவரையே அதிர வைத்ததாம்.

ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அரசல் புரசலாக தகவல் வந்த இவர்களின் காதல் கதை ராம்லீலா படத்தில் வந்த முத்தக்காட்சியில் நிரூபனமானது. பின்னர் இரண்டு வீட்டாரும் சேர்ந்து இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர்.

இருந்தாலும் இருவரும் குழந்தைகள் பெற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வருகின்றனர். தீபிகா படுகோனே தற்போது ஹாலிவுட் சினிமாவிலும் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் தீபிகா படுகோனே ஏற்கனவே காதலில் தோல்வி அடைந்ததால் இனி திருமணம் செய்து கொள்ள வேண்டாம் எனவும், முடிந்தவரை லிவிங் டுகெதர் வகையில் வாழ்ந்து கொள்ளலாம் என முடிவு செய்திருந்தாராம்.

அதன்பிறகுதான் 2012ஆம் ஆண்டு ரன்வீர் சிங்குடன் முதன்முறையாக பழக்கம் ஏற்பட்ட போது இருவருக்குள்ளும் ஒரு புரிதல் இருப்பதாக தோன்றியதாம். நாளுக்கு நாள் இருவரும் பேசி பழகி காதலில் விழுந்து விட்டார்கள்.

ranveersingh-deepika-cinemapettai
ranveersingh-deepika-cinemapettai

இருந்தாலும் காதலிக்கும் போது காதலிப்பதில் எனக்கு பிரச்சனை இல்லை என்றும், ஆனால் அதன்பிறகு வேறு ஒன்று புதிதாக கிடைத்தால் நான் உன்னை விட்டுட்டுச் செல்லவும் தயங்க மாட்டேன் எனவும் ரன்வீர் சிங்கிடம் தெரிவித்தாராம்.

இந்த விஷயம் தெரிந்தும் ரன்வீர் சிங் திருமணம் செய்து கொண்டதுதான் மேலும் அவர் மீதான காதலை அதிகரித்து தற்போது அவரை விட்டு பிரிய முடியாது என்கிற நிலைமைக்கு தீபிகா படுகோனேவை தள்ளிவிட்ட தாம்.

- Advertisement -

Trending News