வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அமரன் படக்குழுவுக்கு 1.1 கோடி அபராதம்.. ஆரம்பத்துலயே யோசிச்சிருக்க வேண்டாமா டைரக்டர் சார்?

Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் நடித்த அமரன் படத்திற்கு திருஷ்டி பட்டு விட்டுடுச்சு போல. ஏற்கனவே படத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை தவறாக காட்டியிருக்கிறார்கள் என குற்றச்சாட்டு சொல்லப்பட்டது. அதை தொடர்ந்து தென் மாவட்டத்தில் ஒரு தியேட்டரில் அமரன் படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சமயத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

போதாத குறைக்கு இப்போது 1.1 கோடி அபராதம் கேட்டு வக்கீல் நோட்டீஸ் வரை பறந்திருக்கிறது. இந்த வருடம் ரிலீசான படங்களிலேயே பெரிய அளவில் வரவேற்பு பெற்ற படம் என்றால் அது சிவகார்த்திகேயனின் அமரன் படம் தான்.

மறைந்த முன்னாள் ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை அவ்வளவு அழகாக எடுத்துக்காட்டி தென்னிந்திய சினிமா ரசிகர்களின் பெரிய வரவேற்பு பெற்றுவிட்டது இந்த பட குழு. சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இந்த படத்தில் அந்தந்த கேரக்டர்களாகவே வாழ்ந்து விட்டார்கள்.

அமரன் படக்குழுவுக்கு 1.1 கோடி அபராதம்

முகுந்த் வரதராஜனின் தேசப்பற்று எந்த அளவுக்கு ரசிக்கப்பட்டதோ, அதே அளவுக்கு அவருடைய காதல் மற்றும் திருமண வாழ்க்கையும் இந்த படத்தில் கொண்டாடப்பட்டது என்று தான் சொல்ல வேண்டும். இதில் சாய் பல்லவி ஒரு காட்சியில் சிவகார்த்திகேயனிடம் தன்னுடைய போன் நம்பரை கொடுத்திருப்பார்.

இந்த காட்சியில் குறிப்பிடப்பட்ட அந்த போன் நம்பருக்கு ரசிகர்கள் போன் பண்ணி சாய் பல்லவி இருக்காங்களா என தொந்தரவு செய்ய ஆரம்பித்து இருக்கிறார்கள். உண்மையில் அது ஒரு பொறியியல் மாணவரின் போன் நம்பராம் இது குறித்து அவர் முதலில் படக்குழுவிடம் புகார் கொடுத்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அந்த மாணவருக்கு தொடர்ந்து போன் கால்கள் வந்து கொண்டே இருந்திருக்கின்றன. ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆகி அந்த மாணவர் நஷ்ட ஈடு வழக்கு தொடுத்திருக்கிறார்.

Trending News