ஷங்கரை சுத்தலில் விட்ட எஸ்ஜே சூர்யா.. தள்ளிப் போகும் ரிலீஸ்

shankar-sj-suryah
shankar-sj-suryah

Shankar : ஷங்கர் இந்தியன் 2 படத்தாலே மிகுந்த மனவேதனையில் இருந்தார். ஏனென்றால் எதிர்பார்த்தது போல் அந்த படம் போகவில்லை. இந்த சூழலில் அடுத்ததாக தெலுங்கில் ராம்சரனை வைத்து கேம் சேஞ்சர் படத்தை எடுத்து வருகிறார். இந்த படத்தில் தான் ஷங்கர் முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்.

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்திற்கு ஒரு பாடலுக்கே கோடிகளை செலவு செய்து உள்ளார் ஷங்கர். விஜய்யின் வாரிசு படத்தை தயாரித்த தில் ராஜு தான் இந்த படத்தை தயாரிக்கிறார். ஏற்கனவே இந்த படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு டிசம்பருக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் இப்போது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு தான் ரிலீஸ் செய்ய உள்ளனராம். இதற்கு காரணம் எஸ்ஜே சூர்யா தான் என்று கூறப்படுகிறது. பெரிய ஹீரோக்கள் வருடத்திற்கு ஒரு படத்தில் தான் நடிப்பார்கள். ஏனென்றால் அந்த கேரக்டரில் இருக்க வேண்டும் என்பதற்காக வேறு படங்களில் கமிட் ஆகாமல் இருப்பார்கள்.

கேம் சேஞ்சர் ரிலீஸ் ஆவதில் தாமதம்

ஆனால் வில்லன் நடிகர்கள் அதிகம் படங்களில் நடித்து வருவார்கள். அந்த வகையில் எஸ்ஜே சூர்யா இப்போது எக்கச்சக்க படங்களை கைவசம் வைத்திருக்கிறார். விக்ரமின் வீரதீர சூரன், பிரதீப் எல் ஐ சி, சர்தார் 2 என நிறைய படங்கள் இருக்கிறது. மேலும் ஷங்கரின் கேம் சேஞ்சர் படத்திற்கு ஏற்கனவே கால்ஷீட் கொடுத்து நடித்து முடித்துவிட்டார்.

இப்போது இன்னும் சில நாட்கள் எஸ்ஜே சூர்யாவின் கால்ஷீட் தேவைப்படுகிறதாம்‌. இதனால் அவருடைய தேதி கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டிருந்தது. ஒரு வழியாக எப்படியோ ஷங்கர் பேசி எஸ்ஜே சூர்யாவிடம் சில நாட்கள் கால்ஷீட் வாங்கி விட்டாராம்.

அதற்கான படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது‌.அதன் பிறகு எடிட்டிங் வேலைகள் முடிந்த பின் ரீலிஸுக்கு தயார் ஆக இருக்கிறது. ஆனால் இந்த வருடம் ரிலீஸ் ஆகும் என நம்பி இருந்த ராம்சரண் ரசிகர்களுக்கு ரிலீஸ் தள்ளி போனது வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisement Amazon Prime Banner