புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தாமதமாகும் விடுதலை 2 ரிலீஸ்.. வெற்றிமாறன் போட்டிருக்கும் திட்டம்

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் சமீபத்தில் வெளியான விடுதலை படம் சக்கை போடு போட்டு வருகிறது. இப்படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் எடுத்து முடித்திருந்தார். பல வருடங்களாக இழுத்துக் கொண்டு இருந்த இந்த இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

எப்போதும் போல விடுதலை படத்திலும் தனது வெற்றியை நிரூபித்து உள்ளார் வெற்றிமாறன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் சினிமா பிரபலங்கள் பலரும் விடுதலை படத்திற்கு பாராட்டுக்களை கூறி வருகிறார்கள். மேலும் விடுதலை படத்தின் வெற்றி இரண்டாம் பாகத்தை பார்க்கும் ஆர்வத்தை தூண்டி இருக்கிறது.

Also read: வெற்றி கொண்டாட்டத்தில் விடுதலை படக்குழு.. வெற்றிமாறன் செய்த காரியம்!

மேலும் விடுதலை முதல் பாகம் வெளியான சில மாதங்களிலேயே விடுதலை 2 வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது ரிலீஸ் தேதி தாமதமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது விடுதலை 2 படத்தில் இன்னும் சில காட்சிகள் எடுக்க வேண்டி இருக்கிறதாம். இதற்காக மே மற்றும் ஜூன் மாதம் படப்பிடிப்பு நடத்தப்படுவதாக தெரிகிறது.

அதுமட்டுமின்றி படத்தில் நிறைய சிஜி வேலைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இப்போதைக்கு விடுதலை 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகையால் இப்படம் இந்த ஆண்டு இறுதியில் அதாவது டிசம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்திலேயே வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக படக்குழு தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

Also read: விடுதலை படத்தின் ரகசியத்தை உளறிய சேத்தன்.. வெகுளியாய் மொத்த உண்மையையும் உடைத்த ஓசி

விடுதலை 2 ரிலீஸ் தாமதமாவது ரசிகர்களுக்கு அதிருப்தியை தந்தாலும் வெற்றிமாறனின் தரமான படத்திற்காக காத்திருக்க தான் வேண்டி இருக்கிறது. கண்டிப்பாக முதல் பாகத்தை காட்டிலும் ரசிகர்களை திக்கு முக்காட செய்யும் வகையில் இரண்டாம் பாகத்தை வெற்றிமாறன் கொடுப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

மேலும் விடுதலை படத்தை முடித்த கையோடு சூர்யாவின் வாடிவாசல் படத்தில் வெற்றிமாறன் இணைய உள்ளார். ஏற்கனவே இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியான நிலையில் சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. ஆகையால் விரைவில் இதற்கான படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

Also read: சிம்புவின் பத்து தலயை ஒரே நாளில் முறியடித்ததா விடுதலை வசூல்.? ஹீரோவாக வேட்டையாடும் சூரி

Trending News