சினிமா துறையை பொருத்தவரை எப்போது என்ன மேஜிக் வேண்டுமானாலும் நடக்கலாம். சின்னத்திரையில் வெற்றி அடைவார்கள் அதேபோல வெள்ளி திரையில் அறிமுகமாகி சின்னத்திரையில் பிரபலமாகும் நடிகர்களும் உண்டு. அந்தவகையில் வெள்ளித்திரையில் குரங்கு பொம்மை மற்றும் கவுண்டமணி ஹீரோவாக நடித்த திரைப்படத்தில் அவருக்கு தங்கையாக நடித்தவர் டெல்னா டேவிஸ் தற்போது சின்னத்திரையில் பிரபலமாக நடித்து வருகிறார்.
தற்போது சன் டிவியில் அன்பேவா தொடரில் நடித்து வருகிறார். டெல்னா முறைப்படியாக பரதம் கற்றுத் தேர்ந்தவர். இவருடைய பரதத்தின் மூலமாக தான் இவருக்கு சினிமாவில் நுழைய வாய்ப்பு கிடைத்தது என்று சொல்லலாம். கேரளாவில் இவருடைய அரங்கேற்ற விழாவில் கலந்து கொண்ட பிரபல விளம்பர நிறுவனம் ஒன்று இவரை ஹோம்லியாக போட்டோஷூட் நடத்தியது.
அது சினிமா துறையினருக்கு கிடைக்கவே டெல்னா சினிமா வாய்ப்பு கிடைக்கப் பெற்றது. இதைத்தொடர்ந்து அவர் சிறிது காலம் சினிமா துறையிலிருந்து விலகி தனது வழக்கறிஞர் படிப்பை தொடர்ந்தார். பிஎல் படிப்பை நிறைவு செய்யும் நேரம் லாக்டோன் ஆரம்பித்துவிட்டதால் எந்த துறையை தேர்ந்தெடுப்பது என்ற ஆலோசனையில் இருந்தார்.
அப்போதுதான் சன் டிவியில் அன்பே வா தொடரில் நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால் நாம் தற்போது அந்த சீரியலில் வரும் நெருக்கமான ரொமான்ஸ் படு வைரலாகி வருகிறது ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தார் .தற்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.