வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

அவதார் போல டிமான்டி காலனியில் இத்தனை பாகங்களா.? புதுவிதமான ஹாரர், நெஞ்சை பதற வைத்த இயக்குனர் ஞானமுத்து

Demonte Colony Movie: ஹாலிவுட்டில் தொடர்ந்து ஐந்து பாகங்கள் தயார் செய்ய திட்டமிட்டு இதுவரை இரண்டு பாகங்களை அவதார் பட குழு வெளியிட்டது. இப்போது அவதார் படத்திற்கே போட்டியாக கோலிவுட்டில் டிமான்டி காலனி படத்தில் அடுத்தடுத்த பாகங்களை வெளியிட முடிவெடுத்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியான ஹாரர் திரைப்படம் தான் டிமான்டி காலனி. இந்த படத்தின் முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், 2ம் பாகத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Also Read: அருள்நிதிக்கு நல்ல பெயர் சம்பாதித்துக் கொடுத்த 5 படங்கள்.. திருப்புமுனை தந்த டிமான்டி காலனி

இதன் மோஷன் போஸ்டரும் சமீபத்தில் வெளியாகி பயமுறுத்தும் அளவுக்கு இருந்தது. இந்த படம் இரண்டு பாகங்கள் மட்டுமல்ல 3-வது, 4-வது பாகங்களும் வெளிவரும் என்று அந்த படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து சமீபத்திய பேட்டியில் தெரிவித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளார்.

மேலும் இந்த படத்தின் 2ம் பாகத்தின் படப்பிடிப்பின் போதே 3ம் பாகத்திற்கான சில காட்சிகள் எடுக்கப்பட்டு விட்டதாகவும், படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் குறுகிய இடைவெளியில் வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். அது மட்டுமல்ல இரண்டாம் பாகம் மிகப்பெரிய பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு வித்தியாசமான ஹாரர் படமாக தயாராகி வருகிறது.

Also Read: 4 பாகங்களாக உருவாகும் அருள்நிதியின் படம்.. லாரன்ஸ் போல் ஆகாமல் இருந்தால் சரிதான்

மொத்தம் நான்கு பாகங்களாக உருவாகும் டிமான்டி காலனி படத்தின் அடுத்தடுத்த பாகங்களுக்கு இடையே ஒரு சில விஷயத்தை தொடர்புப்படுத்தி இருக்கிறார். மேலும் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைந்து ரிலீஸ் செயத் திட்டமிட்டுள்ளனர்.

அதிலும் டிமான்டி காலனி 2 திரைப்படத்தில் என்ன நடக்கும் என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு முன் பகுதி மற்றும் தொடர் காட்சிகள் இரண்டும் இருக்கும். எனவே நிச்சயம் டிமான்டி காலனி 2 புதுவிதமான ஹாரர் படமாகவும் நெஞ்சை பதற வைக்கும் படமாகவும் இருக்கும் என்று அந்தப் படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

Also Read: அந்த மாதிரி படங்களையே தேர்ந்தெடுக்கும் அருள்நிதி.. போங்க பாஸ் ஒரு படம் மட்டும்தான் ஓகே

Trending News