வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

நடிகர் சந்திரபாபு இறந்தபின் நிறைவேற்றப்பட்ட ஆசை.. நண்பனை விட்டுக்கொடுக்காத நட்பு

தன்னுடைய தனித்துவமான காமெடியால் இன்று வரை மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் சந்திரபாபு. பல காமெடி நடிகர்கள் தற்போது வந்து இருந்தாலும் அவருடைய இடம் தற்போது வரை நிரப்பப்படாமல் உள்ளது. இவரைப்போலவே சில படங்களில் விவேக் காமெடி செய்து ரசிகர்களை மகிழ்வித்து உள்ளார்.

இந்நிலையில் மோதலில் ஆரம்பிக்கும் நட்பு மிகவும் நெருக்கமாக இருக்கும் என்பார்கள். அவ்வாறு சந்திரபாபு திரைத்துறையில் ஏதாவது வாய்ப்பு கிடைக்காதா என அலைந்தபோது எம்எஸ் சுப்பையா நாயுடுவை அணுகியுள்ளார். அப்போது அவருக்கு உதவியாளராக பணியாற்றியவர் எம் எஸ் விஸ்வநாதன்.

இதனால் முதலில் எம்எஸ் விஸ்வநாதன் இடம் சந்திரபாபுவை பாட சொல்லிவிட்டு சுப்பையா சென்றுள்ளார். சந்திரபாபுவுக்கு தமிழ் உச்சரிப்புகள் சரியாக வராததால் விஸ்வநாதன் இவரை நிராகரித்துள்ளார். ஆனால் சந்திரபாபு படங்களில் நடித்த பிறகு சினிமாவை தாண்டி விஸ்வநாதனும், சந்திரபாபுவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

சந்திரபாபுவுக்கு இருந்த சில கெட்ட பழக்கத்தினால் சினிமா துறையில் இருந்த பல நட்பு வட்டாரங்கள் அவரிடமிருந்த பிரிந்தனர். ஆனால் கடைசிவரை அவருடன் நட்பாக இருந்தவர் எம் எஸ் விஸ்வநாதன் மட்டும்தான். இந்நிலையில் சந்திரபாபுவின் உடல்நிலை மோசமாக இருந்தபோது தனது கடைசி ஆசையை கூறியுள்ளார்.

அதாவது நான் இறந்த செய்தியை முதலில் விஸ்வநாதன் தான் அறிவிக்க வேண்டும். அதன் பின்பு எனது உடல் சிறிது நேரம் எனது நண்பன் வீட்டில் வைத்துவிட்டு அதன் பின்புதான் என்னை அடக்க செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளாராம்.

அதேபோல் சந்திரபாபு 1974 இல் மார்ச் 8ஆம் தேதி இறந்தபிறகு அவரது உடல் சாந்தோம் சர்ச்சிற்கு எடுத்துச்செல்லப்பட்டு அதன் பின்பு அவரது விருப்பப்படி எம்எஸ் விஸ்வநாதன் இல்லத்தில் வைக்கப்பட்டது. அதன் பிறகுதான் பட்டினப்பாக்கம் கல்லறையில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Trending News