திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.. கல்யாணம்னு சொன்னவுடன் தல தெறிக்க ஓடிய கமல்

உலகநாயகன் கமலஹாசன் எப்படி நடிப்பதில் கைதேர்ந்தவரோ அதற்கு மேலாக பெண்களை வசீகரம் செய்வதிலும் கைதேர்ந்தவர். அதுவும் அவருடன் நடிக்கும் நடிகைகள் பலர் அவரது அழகிலும், பேச்சிலும் மயங்கி காதல் வயப்பட்டு சுற்றிய காலமும் உண்டு. அதிலும் 80களில் பல நடிகைகள் கமலுடன் ஜோடி போட்டு நடிக்க சக்காளத்தி சண்டைப் போட்ட கதையெல்லாம் உண்டு.

அப்படி இருந்தும் கமலஹாசன் முதலாவதாக நடன கலைஞர் வாணியையும், இரண்டாவதாக நடிகை சரிகாவையும் திருமணம் செய்துக்கொண்டு குடும்பம் நடத்தி விவாகரத்து செய்தவர். இவர் விவாகரத்து செய்த பின்னும் நடிகை கௌதமி, கமலுடன் பல வருடங்கள் லிவிங் டூ கெதரில் இருந்து அவரும் பிரிந்தார். அந்த வகையில் உலகநாயகன் ஒரு நடிகையின் பிடியில் தானே சிக்கிக்கொண்டு அதிலிருந்து வெளியே வராமல் தவித்த சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.

Also Read: ஓடுற குதிரைகளை வளைத்து போடும் கமலஹாசன்.. வேடிக்கை பார்க்கும் பொய்க்கால் குதிரைகள்

கமலஹாசன் நடிகை சரிகாவை விவாகரத்து செய்தவுடன் அதிகமாக கிசுகிசுக்கபட்ட நடிகையுடன் லிவிங் டூ கெதரில் இருந்து வந்துள்ளார். மேலும் அவருடனே சில படங்களில் ஒன்றாக ஜோடி சேர்ந்து நடித்தார். அந்த படங்களும் ஹிட்டாகவே, அந்த நடிகைக்கு கமலை திருமணம் செய்ய ஆவல் தெரிவித்துள்ளார். இதனால் காண்டான உலகநாயகன் அந்த நடிகைக்கு டிமிக்கி கொடுத்துள்ளார்.

தமிழில் விஐபி படத்தின் மூலமாக அறிமுகமான நடிகை சிம்ரன் தொடர்ந்து விஜய், அஜித், சூர்யா உள்ளிட்டோருடன் நடித்து பிரபலமானார். இவரது இடுப்பழகுக்கு தமிழ்நாடே மயங்கிய நிலையில், இந்த லிஸ்டில் உலகநாயகனும் இணைந்தார். சிம்ரனிடம் தானாகவே சென்று தன் காதலை தெரிவித்து அவருடன் சில காலம் வாழ்ந்து இருந்தார்.

Also Read: பிளேபாய் அவதாரம் எடுத்த சிம்பு.. உலக நாயகன் கமலஹாசன் கொடுத்த ஐடியா

மேலும் இவர்கள் இருவரும் இணைந்து பம்மல் கே.சம்மந்தம், பஞ்சதந்திரம் உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்தனர். இதனிடையே விவாகரத்தான கமலை கல்யாணம் பண்ணி செட்டிலாகி விடலாம் என நினைத்த சிம்ரன், அவரிடம் கல்யாணம், குழந்தை என்று பேசியுள்ளார். ஆனால் உலகநாயகன் சிம்ரனின் இந்த பேச்சை காதில் கூட வாங்காமல் அவரை விட்டு எஸ்கேப்பாகி விட்டார்.

இதனால் மன வேதனையில் இருந்த சிம்ரன் கமலும் வேண்டாம், சினிமாவும் வேண்டாம் என்ற முடிவில் மன வேதனையுடன் 2003ஆம் ஆண்டு தனது இளம் வயது நண்பரான தீபக் பாகா என்பவரை திருமணம் செய்துக்கொண்டு குழந்தை, குட்டி என செட்டிலாகி விட்டார். ஆனால் உலகநாயகன் தற்போது தனிமையில் வாழ்ந்து வரும் நிலையில், அவ்வப்போது நேரம் கிடைக்கும்போது தனது இரண்டு மகள்களையும் சந்தித்து வருகிறார்.

Also Read: சிவாஜி காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட சிம்ரன்.. கோபத்தை தணிக்க இயக்குனர் செய்த செயல்

Trending News