வியாழக்கிழமை, அக்டோபர் 17, 2024

சிங்கப்பூர் மாதிரி சென்னை துணை முதல்வரின் ஆசை… மழையில் தப்பிய ரஜினி, விஜய், அஜித்.. கொந்தளித்த பிரபலம்

தமிழ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலத்தின் போது மற்ற எந்த மாவட்டத்தையும் விட சென்னைதான் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது. புயல், மழை என ஒவ்வொரு முறை இயற்கை சீற்றத்தின் போதும் அங்கு வசிக்கு பெரும்பாலான மக்களும், மாணவர்களும், பணியாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றன.

மழையில் இருந்து எப்போது விடுதலை

இந்த நிலையில், தற்போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து வரும் நிலையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டு, வேலைவாய்ப்புகள், கட்டமைப்பு வசதிகள், அடிப்படை வசதிகளும், ஏழைகளுக்கான உதவிகளும் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், இந்த திராவிட ஆட்சிகள் தொடர்ந்து மாறி மாறி ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தாலும் சென்னைக்கு எப்போது மழையில் இருந்து விடிவு காலம் வரும்? என்பது பலரது கேள்வியாக இருக்கிறது.

வலைப்பேச்சு அந்தணன் வெளியிட்ட வீடியோ

இதுகுறித்து வலைப்பேச்சு அந்தனன் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், எப்போது மழைக்காலம் வந்தாலும் சென்னை மிதக்க ஆரம்பித்து வருகிறது. பல ஆண்டுகாலமாக கழக ஆட்சி இது தொடர்ந்து வருகிறது. இதற்கு தீர்வு செய்யப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் மனைவி கிருத்திகா உதயநிதியின் பேட்டி ஒன்றைப் பார்த்தேன்.

அதில், எங்களின் கனவு, சிங்கப்பூர் மாதிரி சென்னையை மாற்ற வேண்டும். வெளிநாடு சென்ற போது அதே மாதிரி இங்கு செயல்படுத்த வேண்டும். இந்த கழிவு நீர் கால்வாய்களை ஒன்றிணைத்து கடலுக்குள் செல்லவிட வேண்டும் என்பது கனவாக இருப்பதாக கூறியிருந்ததாக தெரிவித்தார். ஆனால், கனவு நிறைவேறவில்லை. ரூ.4000 கோடி புராஜக்ட்டுக்கு என்ன பணி, எவ்வளவு தரமாக செய்தீர்கள்? அதை ஏன் கட்சிக்காரர்களுக்கு காண்ட்ராக்ட் கொடுக்க வேண்டு? எல் & டி மாதிரி நிறுவனத்திற்கு ஒப்படைத்து புளூ பிரிண்ட் கொடுத்தால் திட்டமிட்டபடி சரியாகச் செய்வர்.

வேளச்சேரியில் குறிப்பிட்ட பகுதியில் உதயநிதி கண்டுபிடித்திருக்கிறார். ஒரு கால்வாயில் பாதி மணல் பித்தாக அடைத்திருக்கிறது. அதை பொக்லைன் வைத்து தோண்டி அதை உடைத்து, இப்போது நீர் போகிறது. ஒரு துணை முதல்வருக்கு, தெரிகிறது அதிகாரிகளுக்கு ஏன் தெரியவில்லை என அதிகாரிகளை விமர்சித்திருக்கிறார்.சென்னைக்கு விடுக்கப்பட்டிருக்கிற ரெட் அலர்ட் சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கிச் சென்றிருக்கிறது. மீண்டும் வரலாம் அதற்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 95 சதவீத பணிகள் முடிந்தது என்றால் அதை முடிக்க வேண்டும். ஆனால் இப்போது புலம்புகிற மக்கள் பணத்திற்கு ஓட்டுப்போட்டால் என்ன மாற்றம் வரும்?

மழையில் தப்பிய ரஜினி, விஜய், அஜித்

ஒவ்வொரு மழைகாலம் வரும்போது, ரஜினியின் ரசிகர்கள் ’’சூப்பர் ஸ்டார் தன் ராகவா திருமண மண்டபத்தை திறந்துவிட்டார். அதில் பல பேர் வந்து தங்கியுள்ளனர். அஜித்தும் ஆயிரம் பேர் தன் வீட்டிற்குள் தங்கவிட்டு, அவர்களுக்கு பணம் கொடுத்துவிட்டார். விஜய்யும் சாலிகிராமம், வட பழனியில் இரண்டு மண்டபத்தை திறந்துவிட்டு அங்கு மக்கள் தங்கியுள்ளனர்’’ என்று புரளியைக் கிளப்பிவிடுவார்கள். அப்படி புரளியைக் கிளப்பி விடுபவர்கள் எங்கு போனார்கள் என தெரியவில்லை.

இப்படி ஒரு சூழல் வந்தால் அம்மண்டபத்தை ரஜினிக்கு நெருங்கியவர்கள் பூட்டிவிடுவர். ரஜினி அம்மண்டபத்தை நாட்டிற்கு அர்ப்பணித்தார். ஒரு நாளைக்கு அங்கு ரூ.15 லட்சம் வாடகை. ஏழைகள் திருமண செய்ய முடியாது. அஜித் பைக்கில் எங்கேயே பைக் ரெய்டு செய்து கொண்டிருக்கிறார். ஆனால் தான் நடிக்கும் சினிமா படத்திற்கு விளம்பரம் செய்ய மாட்டார். அவரது பைக் ரெட் கம்பெனிக்கு மட்டும் அவர் விளம்பரம் செய்கிறார்.

விஜயின் மண்டபத்தை லலித் வாங்கிவிட்டதாக கூறப்படுகிறது. விஜய்க்கு மண்டபம் கிடையாது. அவரைப் பற்றியும் கூற வேண்டாம். அவர்களை நம்பி ரசிகர்கள் தலைவர்களாக நினைத்துக் கொண்டிருப்பது கோமாளித்தனமாக இருக்கிறது, அவர்கள் செய்யாததை செய்ததாக சொல்லி பொய் பேச வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

வலைப்பேச்சு அந்தணன் மீது விமர்சனம்

வலைப்பேச்சு அந்தணன் மற்றும் வலைபேச்சு சினிமா விமர்சகர்கள் அனைவரும், சினிமா நடிகர்களைப் பற்றியும், ரசிகர்களைப் பற்றியும் இப்படி கடுமையான விமர்சித்தாலும் அவர்களும் சினிமாவைப் பற்றியும், சினிமா நடிகர், நடிகைகளைப் பற்றித்தான் தினமும் பேசி, அவர்களை உயர்வாக மதிப்பிடுவதுபோல் பேசி, வீடியோ வெளியிட்டு அதன் மூலம் காசு பார்த்து வருகின்றனர். அவர்கள் முதலில் சினிமாவைவிட்டு பொது நலன் சார்ந்த கருத்துகளை தினமும் கூறட்டும் என ரசிகர்கள் அந்தண ன் பேச்சுக்கு கடுமையான விமர்சனம் கூறி வருகின்றனர்.

- Advertisement -spot_img

Trending News